வேளச்சேரி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
தரமணி, வேளச்சேரி - தரமணி நுாறடி சாலையில், வடிகால் கட்ட இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.வேளச்சேரி - தரமணி சாலை, நுாறடி அகலம் கொண்டது. இந்த சாலை மைய பகுதியில், மூடு கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டு வடிகாலில் இருந்து வடியும் மழை நீர், மூடு கால்வாய் வழியாக பகிங்ஹாம் கால்வாயை அடைகிறது.பக்கவாட்டில் உள்ள வடிகால் பணி முழுமை பெறவில்லை. இதில், சில
 வேளச்சேரி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

தரமணி, வேளச்சேரி - தரமணி நுாறடி சாலையில், வடிகால் கட்ட இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

வேளச்சேரி - தரமணி சாலை, நுாறடி அகலம் கொண்டது. இந்த சாலை மைய பகுதியில், மூடு கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டு வடிகாலில் இருந்து வடியும் மழை நீர், மூடு கால்வாய் வழியாக பகிங்ஹாம் கால்வாயை அடைகிறது.

பக்கவாட்டில் உள்ள வடிகால் பணி முழுமை பெறவில்லை. இதில், சில பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால், வடிகால் கட்டுவது காலதாமதம் ஆனது.

இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையினர், வடிகால் கட்ட இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடித்தனர்.

'வேளச்சேரி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. தரமணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள், ஓரிரு வாரத்தில் அகற்றப்படும்' என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X