போக்குவரத்தில் மாற்றம் வேளச்சேரியில் மகிழ்ச்சி

Added : நவ 22, 2022 | |
Advertisement
வேளச்சேரி,: வேளச்சேரி விரைவு சாலையில் ஏற்பட்ட வாகன நெரிசலுக்குத் தீர்வு காண, சாலை தடுப்பை அகற்றி மாற்றுப் பாதை அமைக்கப்பட்டது.வேளச்சேரி விரைவு சாலை, 1.5 கி.மீ., துாரம் கொண்டது. இந்த சாலையின் பக்கவாட்டில், வேளச்சேரி ஏரி உபரி நீர் செல்லும், 20 அடி அகல கால்வாய் உள்ளது. இது, சமீபத்தில் மூடு கால்வாயாக மாற்றப்பட்டது.இதனால், சாலை அகலம் அதிகரித்தது. லட்சுமி நகர் சந்திப்பில், சாலை
 போக்குவரத்தில் மாற்றம் வேளச்சேரியில் மகிழ்ச்சி



வேளச்சேரி,: வேளச்சேரி விரைவு சாலையில் ஏற்பட்ட வாகன நெரிசலுக்குத் தீர்வு காண, சாலை தடுப்பை அகற்றி மாற்றுப் பாதை அமைக்கப்பட்டது.

வேளச்சேரி விரைவு சாலை, 1.5 கி.மீ., துாரம் கொண்டது. இந்த சாலையின் பக்கவாட்டில், வேளச்சேரி ஏரி உபரி நீர் செல்லும், 20 அடி அகல கால்வாய் உள்ளது. இது, சமீபத்தில் மூடு கால்வாயாக மாற்றப்பட்டது.

இதனால், சாலை அகலம் அதிகரித்தது. லட்சுமி நகர் சந்திப்பில், சாலை மற்றும் மூடு கால்வாய் இடையே, கழிவு நீரேற்று நிலையம் உள்ளது. மாற்று இடம் கிடைக்காததால், இந்த கழிவு நீரேற்று நிலையத்தை இடம் மாற்றுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இதனால், விரைவு சாலையில் நெரிசல் அதிகரித்ததால், லட்சுமி நகர் சந்திப்பில் உள்ள சாலை மைய வழி அடைக்கப்பட்டது.

இதன் காரணமாக லட்சுமி நகர், வெங்கடேஸ்வரா நகர், விஜயலட்சுமி நகர், சசி நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள், 1.5 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டி இருந்தது.

இதனால், ஏரிக்கரை சிக்னலில், வழக்கத்திற்கு மாறாக நெரிசல் அதிகரித்தது.

இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, லட்சுமி நகர் சந்திப்பில் இருந்து கிண்டி நோக்கிச் செல்லும் சாலையில், 200 அடி துாரத்தில், சாலை மைய தடுப்பை அகற்றி, இருவழிப் பாதை அமைக்கப்பட்டது.

சசி நகர், அஷ்டலட்சுமி நகர் பகுதி மக்கள், கிண்டியில் இருந்து இந்த வழியாக எளிதில் செல்ல முடியும். அதேபோல், லட்சுமி நகர், விஜயலட்சுமி நகர் பகுதி மக்கள், இந்த வழியாக, வேளச்சேரி விஜய நகர் செல்ல முடியும்.

இதனால், 1.5 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல் வழிவகை செய்ததால், பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X