ரூ.67 லட்சம் 'ஹவாலா' பூந்தமல்லியில் பறிமுதல்

Added : நவ 22, 2022 | |
Advertisement
பூந்தமல்லி :பூந்தமல்லி அருகே, உரிய ஆவணங்களின்றி தங்கம் வாங்க வந்த ஆந்திர வாலிபரிடம் இருந்து, 67.50 லட்சம் ரூபாயை, வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகளில், கஞ்சா கடத்தி வரப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து, நசரத்பேட்டை போலீசார், கூட்டு சாலையில் நேற்று சோதனை நடத்தினர்.அப்போது, ஆந்திர மாநிலம், சித்துாரில்

பூந்தமல்லி :பூந்தமல்லி அருகே, உரிய ஆவணங்களின்றி தங்கம் வாங்க வந்த ஆந்திர வாலிபரிடம் இருந்து, 67.50 லட்சம் ரூபாயை, வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகளில், கஞ்சா கடத்தி வரப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து, நசரத்பேட்டை போலீசார், கூட்டு சாலையில் நேற்று சோதனை நடத்தினர்.

அப்போது, ஆந்திர மாநிலம், சித்துாரில் இருந்து வந்த பேருந்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயணம் செய்த நபரிடம், கட்டு கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.

நகை வாங்குவதற்காக, 20 லட்சம் ரூபாயை எடுத்து செல்வதாக அந்த நபர் கூறினார். அதேநேரத்தில், பணத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.

இதையடுத்து, அந்த நபரை கீழே இறக்கி, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு, போலீசார் தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உமேஷ், 26, என்பதும், அவர் கொண்டு வந்த பணத்தை எண்ணியபோது, 67.50 லட்சம் ரூபாய் இருந்ததும் தெரியவந்தது.

மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல், சென்னை சவுகார்பேட்டையில் நகைகள் வாங்குவதற்கு பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த வருமான வரித்துறை அதிகாரிகள், உமேஷிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X