தேனீ வளர்ப்பில் கூடுதல் மகசூல், வருவாய் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

Added : நவ 22, 2022 | |
Advertisement
உடுமலை:தேனுக்கான தேவை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் தேனீ வளர்ப்புபில் ஈடுபடலாம். தோட்டக்கலைத்துறை சார்பில், 40 சதவீதம் மானியத்தில், தேன், தேன் பெட்டிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற, தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம்.

உடுமலை:தேனுக்கான தேவை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் தேனீ வளர்ப்புபில் ஈடுபடலாம். தோட்டக்கலைத்துறை சார்பில், 40 சதவீதம் மானியத்தில், தேன், தேன் பெட்டிகள் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது:

விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற, தேனீ வளர்ப்பில் ஈடுபடலாம். சிறந்த மருத்துவ பொருளான தேன் மற்றும் அதனை சார்ந்த பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதால், தேனீ வளர்ப்பு, குறைந்த முதலீட்டில் அதிக வருவாய் கொடுக்கும் தொழிலாக உள்ளது.

இதில், சமவெளி ரகத்தை நிலப்பகுதியிலும், மலை ரகத்தை மலை சார்ந்த இடங்களிலும் வளர்க்கலாம்.

தேன் பண்ணை அமைக்க தேர்வு செய்யுமிடம், தேனீக்களுக்கும், தேனீ வளர்ப்போருக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.

2 கி.மீ., துாரம் சுற்றுப்பகுதிகளில், தேனீக்களுக்கு மதுரம் மற்றும் மகரந்தம் தரும் மரம், செடி, கொடிகள் இருக்க வேண்டும். துாய்மையான நீர் அவசியம்; கிணறு, ஓடை, கால்வாய் இருப்பதோடு, நிழல் அவசியம்.

தேனீ பெட்டிகளுக்கு, இடையே ஆறு அடி இடைவெளிஇருந்தால், பணி தேனீக்கள் கூடுமாறி செல்வது தவிர்க்கப்படும்.

ராணி தேனீயின் செயல்பாடு, பழைய கருத்த அடைகளை நீக்கவும், பூச்சி நோய் தாக்குதல் மற்றும் தேன் சேகரிப்பு குறித்து, அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். தேனீக்களுக்கு அனைத்து பயிர்களுமே உணவு தரும் பயிர்களாகும்.

அதிலும், நாவல், முந்திரி, கொடுக்காப்புளி, தென்னை, பனை, பாக்கு, நெல்லி, கொய்யா, சப்போட்டா வாழை, முருங்கை, அகத்தி, தக்காளி, கத்தரி பூசணி, வெங்காயம், முட்டைக்கோஸ், அவரை, கொத்தமல்லி, சூரியகாந்தி போன்ற பயிர்கள் தேனீ வளர்ப்புக்கு உகந்த பயிர்கள் ஆகும்.

மழைக்காலங்களில், மழை நீர் உள்ளே புகாதபடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மெழுகுப்பூச்சியின் தாக்குதலை தவிர்க்க, அடிக்கடி அடிப்பலகையை சுத்தம் செய்ய வேண்டும்.

தேனீக்கள் வளர்ப்பதால், அயல் மகரந்தச் சேர்க்கையால் கூடுதல் மகசூல் மற்றும் தேன் விற்பனை வாயிலாக, கூடுதல் வருவாய் கிடைக்கும்.

தமிழக அரசு தேனீ வளர்ப்பை ஊக்கப்படுத்தும் வகையில், தோட்டக்கலை வாயிலாக, 40 சதவீதம் மானியத்தில், தேனீக்களுடன் தேனீ பெட்டிகள், தேன் பிழியும் கருவி, புகைவிடும் கருவி ஆகியவை வழங்கப்படுகிறது.

மடத்துக்குளம் வட்டாரத்திற்கு, 50 தேனீ பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்தாண்டு இத்திட்டத்தின் கீழ், பாப்பான்குளம் விவசாயி தண்டபாணிக்கு தேனீக்கள் வழங்கப்பட்டது.

தேன் எடுத்து உழவர் சந்தை மற்றும் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகிறார்.

மேலும் தேனீக்கள் வளர்க்க விரும்புபவர்களுக்கு தோட்டத்திலேயே இலவசமாக பயிற்சியும் அளித்து வருகிறார்.

பயிற்சி பெற விரும்புபவர்கள், 99423 99396 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தேனீ பெட்டிகள் பெற விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், உரிமைச்சான்று, ரேஷன் கார்டு நகல், ஆதார் நகல், வங்கிக்கணக்கு நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்- 2, ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.

மேலும் விபரங்களுக்கு, உதவி தோட்டக்கலை அலுவலர்கள், தாமோதரன் 96598 38787, நித்யராஜ் 84890 95995 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X