மாவட்டம் முழுதும் மார்க்கெட் கமிட்டிகள் முடங்கின! இ-நாம் திட்டத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு

Added : நவ 22, 2022 | |
Advertisement
மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், சங்கராபுரம், உளுந்துார்பேட்டை, திருநாவலுார், மணலுார்பேட்டை, வடக்கனந்தல், மூங்கில்துறைப்பட்டு ஆகிய இடங்களில் மார்க்கெட் கமிட்டிகள் இயங்கி வருகின்றன.இதில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் கமிட்டிகளில் மக்காசோளம் பயிர்களின் வரத்து அதிகமாக உள்ளது. உளுந்துார்பேட்டை, தியாகதுருகம், சங்கராபுரம், மணலுார்பேட்டை
 மாவட்டம் முழுதும் மார்க்கெட் கமிட்டிகள் முடங்கின! இ-நாம் திட்டத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு

மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம், சங்கராபுரம், உளுந்துார்பேட்டை, திருநாவலுார், மணலுார்பேட்டை, வடக்கனந்தல், மூங்கில்துறைப்பட்டு ஆகிய இடங்களில் மார்க்கெட் கமிட்டிகள் இயங்கி வருகின்றன.

இதில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் கமிட்டிகளில் மக்காசோளம் பயிர்களின் வரத்து அதிகமாக உள்ளது. உளுந்துார்பேட்டை, தியாகதுருகம், சங்கராபுரம், மணலுார்பேட்டை மார்க்கெட் கமிட்டிகளில் நெல் உள்ளிட்ட விளை பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறன.

மார்க்கெட் கமிட்டிகளில் விவசாயிகள் கொண்டு வரும் விவசாய விளை பொருட்கள் அனைத்தும், வியாபாரிகள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு ஏலத்தில் எடுத்து வந்தனர். மறைமுக ஏலத்தின் மூலம் வியாபாரிகள் விலை மதிப்பீடு செய்த பட்டியலை தனிபெட்டியில் போடுவார்கள். இதில் அதிக விலை கேட்கும் வியாபாரிகளுக்கு பொருட்களை விவசாயிகளிடமிருந்து வாங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இந்நிலையில் மத்திய அரசு இ-நாம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கமிட்டிகளில் இடைத்தரகர்களை தவிர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில், விவசாய விளை பொருட்களை ஏலத்தில் எடுக்க ஆன்லைன் முறையை பயன்படுத்தமாறு அறிவுறுத்தப்பட்டது.

இ-நாம் திட்டம் சில மார்க்கெட் கமிட்டிகளில் ஏற்கனவே செயல்படுத்த அறிவுறுத்தினாலும், அதற்கு வியாபாரிகள் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து சீட்டு முறையினையே பயன்படுத்தினர்.

தற்போது அனைத்து மார்க்கெட் கமிட்டிகளிலும் இ-நாம் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் விளை பொருட்களுக்கு மதிப்பீடு செய்யும் வியாபாரிகள், மொபைல் போன் மூலம் விலை நிர்ணயம் செய்து ஏலத்தில் பங்கேற்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து வருகின்றனர்.

இத்திட்டத்தில் விளை பொருட்களை நேரடியாக பார்வையிட்டும், கமிட்டிக்கு வரமுடியாத பட்சத்தில் வீட்டிலிருந்தவாறு மொபைல் போன் மூலம் விலை நிர்ணயம் செய்து ஏலத்தில் பங்கேற்க முடியும். வியாபாரிகள் பொருட்களுக்கு நிர்ணயித்த விலையை விவசாயிகளும் தெரிந்து கொள்ள முடியும். மேலும் விவசாயிகளுக்கு பணம் செலுத்தினால் மட்டுமே வியாபாரிகள் கமிட்டிலிருந்து பொருட்களை வெளியே கொண்டு செல்ல முடியும்.

முன்பு ஏலம் எடுத்துவிட்டு பொருட்களை வாங்கிய பிறகும், வியாபாரிகள் பலர் பணம் கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். புதிய திட்டத்தில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக கூறி, மார்க்கெட் கமிட்டி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட் கமிட்டிகளும் கடந்த 17ம் தேதி முதல் செயல்படாமல் முடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில விவசாயிகள் பண பிரச்னை காரணமாக வெளியே குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

வியாபாரிகளின் எதிர்ப்பு காரணமாக மார்க்கெட் கமிட்டிகளில் உள்ள அறிவிப்பு பலகையில் மின்னணு தேசிய வேளாண் சந்தை எனும் இ-நாம் திட்டத்தில் பங்கு கொள்ள வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு கிடைக்காததால் மறு அறிவிப்பு வரும் வரை ஏலம் ஒத்தி வைக்கப்படுகிறது என்று கமிட்டிகளில் முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X