அரசு கல்லுாரிக்கு கூடுதல் பஸ் இயக்குவது அவசியம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
பராமரிப்பு இல்லைமடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனில் கழிப்பிடம், பராமரிப்பில்லாமல் உள்ளது. இதன் முன்புறம் பிளாஸ்டிக், குப்பை காணப்படுகிறது. இதனால், இதை பயணியர் பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். எனவே, இதை பராமரிக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜேந்திரன், உடுமலை. சேதமடைந்த பூங்காஉடுமலை நகராட்சி ஸ்ரீநகர் பூங்கா பராமரிப்பின்றியும்,
 அரசு கல்லுாரிக்கு கூடுதல் பஸ் இயக்குவது அவசியம்


பராமரிப்பு இல்லை



மடத்துக்குளம் ரயில்வே ஸ்டேஷனில் கழிப்பிடம், பராமரிப்பில்லாமல் உள்ளது. இதன் முன்புறம் பிளாஸ்டிக், குப்பை காணப்படுகிறது. இதனால், இதை பயணியர் பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். எனவே, இதை பராமரிக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராஜேந்திரன், உடுமலை.


சேதமடைந்த பூங்கா



உடுமலை நகராட்சி ஸ்ரீநகர் பூங்கா பராமரிப்பின்றியும், விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்தும் காணப்படுகிறது. இதனால், இங்கு வரும் பொதுமக்கள், சிறுவர்கள் ஏமாற்றமடைகின்றனர். எனவே, இந்த பூங்காவை நகராட்சியினர் பராமரிக்க வேண்டும்.

- கார்த்திக், உடுமலை.


கூடுதல் பஸ் இயக்கணும்



உடுமலையிலிருந்து, அரசு கலைக்கல்லுாரிக்கு காலை நேரங்களில் குறைந்த பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால், மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்ய வேண்டியதுள்ளது. எனவே, காலை, 8:00 மணி முதல், 8:30 மணி வரை கூடுதல் பஸ்சை போக்குவரத்து கழகத்தினர் இயக்க வேண்டும்.

- வசந்தகுமார், உடுமலை.


சுகாதாரம் பாதிப்பு



உடுமலை நகராட்சி 5வது வார்டு புஷ்பகிரி வேலன் நகர் பகுதியில், காலியிடத்தில் குப்பை, கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், இப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. நோய் பரவவும் வாய்ப்புள்ளது. இந்த, குப்பை, கழிவுகளை நகராட்சி சுகாதாரத்துறையினர் அகற்ற வேண்டும்.

- பத்ரி நாராயணன், உடுமலை.


சேதமான ரோடு



உடுமலை, ராமசாமி நகர் ரயில்வே கேட்டிலிருந்து, மேற்கு பகுதி சாலையில் ரோடு குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதில், செல்லும் வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, இந்த ரோட்டை நகராட்சியினர் சீரமைக்க வேண்டும்.

- பூங்கொடி, உடுமலை.


குப்பையால் பாதிப்பு



உடுமலை, தளி ரோடு மேம்பாலத்தின் கீழ், ரோட்டில் குப்பை, பிளாஸ்டிக் கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, அங்கு குப்பை, பிளாஸ்டிக் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

- முருகன், உடுமலை.


அழகுபடுத்தணும்



உடுமலை பஸ் ஸ்டாண்ட் எதிரில், ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதன் உட்புற பகுதியில் அழகுபடுத்தப்படாமல், பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே, அங்கு, செயற்கை நீருற்று, புற்கள் அமைத்து அழகுபடுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மோகன்குமார், உடுமலை.


குடிநீர் வசதி வேண்டும்



உடுமலை பஸ் ஸ்டாண்ட் பகுதியில், போதிய குடிநீர் வசதியில்லாததால், அங்கு வரும் மக்கள் குடிநீருக்கு பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். கடைகளில் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டியதுள்ளது. எனவே அங்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.

- செல்வம், உடுமலை.


நாய்களுக்கு சிகிச்சை



உடுமலை, கொழுமம் ரோடு, அமுத ராணி பஸ் நிறுத்தம் அருகே, நோய்வாய்ப்பட்ட நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால், அப்பகுதி மக்களுக்கு நோய் பரவ வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட நாய்களை நகராட்சியினர் பிடித்து தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

- சிவக்குமார், உடுமலை.


நோயாளிகள் அவதி



உடுமலை, அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டில், ஜன்னலில் அமைக்கப்பட்ட கொசுவலை சேதப்படுத்தியுள்ளனர். இதனால், கொசுக்கள் நுழைந்து, அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதை, அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் சரி செய்ய வேண்டும்.

- மூர்த்தி, உடுமலை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X