ஊராட்சி பள்ளிகளில் சி.இ.ஓ., திடீர் ஆய்வு

Added : நவ 22, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : அணைக்கரை கோட்டாலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் எண்ணும், எழுத்தும் திட்டத்தை சி.இ.ஓ., ஆய்வு செய்தார்.கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகள் பள்ளிக்கு வராமலேயே அடுத்த வகுப்புக்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக தொடக்கப் பள்ளி மாணவர்கள் (1, 2 வகுப்பு) எண்ணும், எழுத்தும் முழுவதுமாகப் படிக்காமலேயே தேர்ச்சி பெற்றனர்.அதனால் ஏற்பட்ட இடை வெளியைப் போக்கும்
 ஊராட்சி பள்ளிகளில் சி.இ.ஓ., திடீர் ஆய்வு


கள்ளக்குறிச்சி : அணைக்கரை கோட்டாலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் எண்ணும், எழுத்தும் திட்டத்தை சி.இ.ஓ., ஆய்வு செய்தார்.

கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகள் பள்ளிக்கு வராமலேயே அடுத்த வகுப்புக்கு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக தொடக்கப் பள்ளி மாணவர்கள் (1, 2 வகுப்பு) எண்ணும், எழுத்தும் முழுவதுமாகப் படிக்காமலேயே தேர்ச்சி பெற்றனர்.

அதனால் ஏற்பட்ட இடை வெளியைப் போக்கும் வகையில் துவக்கப் பள்ளிகளில் 'எண்ணும் எழுத்தும்' திட்டம் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி அடுத்த அணைக்கரைகோட்டாலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டம் மூலம் கற்றல் மற்றும் கற்பிக்கும் வகுப்பறையினை சி.இ.ஓ., சரஸ்வதி ஆய்வு செய்தார்.

இடப்பற்றாக்குறையால் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் செயல்படும், உயர்நிலைப் பள்ளியின் வகுப்பறைகளை ஆய்வு செய்தார். தலைமை ஆசிரியர்கள் சாந்தி, ரோஸ்லின்மேரி, ஊராட்சி தலைவர் வெங்கடேசன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X