பீஹார் வாலிபரிடம் வழிப்பறி: மூவர் கைது

Added : நவ 22, 2022 | |
Advertisement
கொடுங்கையூர் :பீஹார் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொடுங்கையூர் வாலிபர்கள் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.கொடுங்கையூர், கே.எம்.ஏ., கார்டன் 2வது தெருவைச் சேர்ந்தவர் விஜய், 22. பீஹாரைச் சேர்ந்த இவர், கொடுங்கையூரில் தங்கி பிளாஸ்டிக் கம்பெனியில் பணி புரிகிறார்.நேற்று முன்தினம், வேலை முடித்து தன் நண்பர் சங்கர், 45, என்பவருடன் தன் வீட்டருகே நடந்து சென்றார். அப்போது
 பீஹார் வாலிபரிடம் வழிப்பறி: மூவர் கைது

கொடுங்கையூர் :பீஹார் வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொடுங்கையூர் வாலிபர்கள் உட்பட மூவரை, போலீசார் கைது செய்தனர்.கொடுங்கையூர், கே.எம்.ஏ., கார்டன் 2வது தெருவைச் சேர்ந்தவர் விஜய், 22. பீஹாரைச் சேர்ந்த இவர், கொடுங்கையூரில் தங்கி பிளாஸ்டிக் கம்பெனியில் பணி புரிகிறார்.

நேற்று முன்தினம், வேலை முடித்து தன் நண்பர் சங்கர், 45, என்பவருடன் தன் வீட்டருகே நடந்து சென்றார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த மூவர், கத்தியால் இருவரையும் வெட்டி, 500 ரூபாய் பறித்து சென்றனர். இதில் விஜய், சங்கர் இருவரும் பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், கொடுங்கையூர், யூனியன் கார்பேட் காலனி, காந்தி சாலையைச் சேர்ந்த பாலாஜி, 20, கொருக்குப்பேட்டை, பாரதி நகரைச் சேர்ந்த பாண்டித்துரை, 20, கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகரைச் சேர்ந்த காளீஸ்வரன், 20, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீசார் மூவரையும் கைது செய்து, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X