குடிநீர் தொட்டியில் விழுந்த மாடு மீட்பு

Added : நவ 22, 2022 | |
Advertisement
உளுந்துார்பேட்டை: ளுந்துார்பேட்டையில் குடிநீர் தொட்டியில் விழுந்த பசுமாட்டை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர்.உளுந்துார்பேட்டை நகராட்சி, டி.வி.என்., ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது பசுமாடு ஒன்று, நேற்று மதியம் 1:00 மணியளவில் உளுந்துார்பேட்டை நகராட்சி, ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள 10 அடி ஆழமுள்ள குடிநீர் தொட்டியில் விழுந்தது.பசுமாடு

உளுந்துார்பேட்டை: ளுந்துார்பேட்டையில் குடிநீர் தொட்டியில் விழுந்த பசுமாட்டை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

உளுந்துார்பேட்டை நகராட்சி, டி.வி.என்., ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது பசுமாடு ஒன்று, நேற்று மதியம் 1:00 மணியளவில் உளுந்துார்பேட்டை நகராட்சி, ஈஸ்வரன் கோவில் தெருவில் உள்ள 10 அடி ஆழமுள்ள குடிநீர் தொட்டியில் விழுந்தது.

பசுமாடு வெளியேற முடியாமல் தவித்தது. தகவல் அறிந்த உளுந்துார்பேட்டை தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சக்கரவர்த்தி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X