மேம்பாலம் கட்டுமானப் பணி: கலெக்டர் நேரில் ஆய்வு

Added : நவ 22, 2022 | |
Advertisement
விழுப்புரம்: நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1,013 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் மற்றும் சாலை பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் கூட்ரோட்டில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஜானகிபுரம் கூட்ரோட்டில் இருந்து புதுச்சேரி வரை 29 கி.மீ., துாரத்திற்கு 1,013 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நான்கு வழிச்சாலை

விழுப்புரம்: நெடுஞ்சாலைத்துறை சார்பில் 1,013 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் மற்றும் சாலை பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் அடுத்த ஜானகிபுரம் கூட்ரோட்டில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஜானகிபுரம் கூட்ரோட்டில் இருந்து புதுச்சேரி வரை 29 கி.மீ., துாரத்திற்கு 1,013 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நான்கு வழிச்சாலை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜானகிபுரம் சந்திப்பில் புதிதாக பூஜ்ஜியம் கி.மீட்டராக நிலையாக வைத்து 60 மீட்டர் நீளத்தில் 25 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது.

இப்பணியை கலெக்டர் மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில், அதிகப்படியான வாகனங்கள் சென்று வருவதால் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திடும் பொருட்டு, பணி நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகைகள் கூடுதலாக வைக்க வேண்டும்.

வரும் வாகனங்கள் தெரியும் அளவிற்கு தற்போது வைக்கப்பட்டுள்ள தடுப்புகளின் அளவைக் குறைத்து குறைந்த உயரத்தில் தடுப்புகள் அமைக்க வேண்டும்.

இரவு நேரங்களில் பணிகள் நடைபெறும் சமயத்தில் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஒளிரும் வகையில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் மற்றும் பதாகைகள் ஏற்படுத்த வேண்டும். பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து வழங்கும் இடம், புறநோயாளிகள் பிரிவு, ஆய்வகங்கள், மகப்பேறு அறை, பொது மருத்துவம் அறை போன்றவற்றை பார்வையிட்டார்.

எஸ்.பி., ஸ்ரீநாதா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிவசேனா, ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன், நகாய் திட்ட இயக்குனர் சக்திவேல், திட்ட மேலாளர் குமரன், தாசில்தார் ஆனந்தகுமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொற்கொடி உட்பட பலர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X