திருவொற்றியூர் :திருவொற்றியூரில் தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை, திருவொற்றியூர், மாட்டு மந்தை பகுதி அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக, உணவு பொருள் வழங்கல் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு, நேற்று தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையர் நெகேமியா, கண்காணிப்பாளர் பன்னீர்செல்வம், கலாவதி, தணிக்கை ஆய்வாளர் சுகுமார் தலைமையிலான அதிகாரிகள், குடோனில் சோதனையிட்டனர்.
அங்கு ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மொத்தம் 7,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பின், இது குறித்து பட்டரவாக்கத்தில் உள்ள குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அவர்கள் விசாரிக்கின்றனர்.