அதிகாரிகளை சிறை பிடித்து துாய்மை பணியாளர்கள் போராட்டம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
தாம்பரம், :தாம்பரம் மாநகராட்சியில், 1,200 தற்காலிக துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்கள், ஒப்பந்ததாரர்கள் வாயிலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.சமீப காலமாக, இவர்களுக்கு முறையாக மாத ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.குறிப்பாக, பல்லாவரம் மண்டலத்தில், ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் ஊதியம் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.இதனால், குடும்பம் நடத்த முடியாத சூழல்
 அதிகாரிகளை சிறை பிடித்து துாய்மை பணியாளர்கள் போராட்டம்

தாம்பரம், :தாம்பரம் மாநகராட்சியில், 1,200 தற்காலிக துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்கள், ஒப்பந்ததாரர்கள் வாயிலாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சமீப காலமாக, இவர்களுக்கு முறையாக மாத ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.குறிப்பாக, பல்லாவரம் மண்டலத்தில், ஒவ்வொரு மாதமும் சரியான நேரத்தில் ஊதியம் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.இதனால், குடும்பம் நடத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. அதேபோல், தற்காலிக பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், முறையாக ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், நேற்று மாலை, மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஒரு கட்டத்தில், குறைகளை கேட்க அதிகாரிகள் யாரும் வராததால், ஆத்திரம்அடைந்தவர்கள் சுகாதாரப் பிரிவு அதிகாரிகளை சிறைபிடித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி கமிஷனர் நேரில் வந்தால் மட்டுமே, போராட்டம் கைவிடப்படும் எனக் கூறினர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. தாம்பரம் போலீசார் பேச்சு நடத்தியும் பயனில்லை.

இறுதியில், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு நடத்தி, இன்று நேரில் சந்தித்து குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்வதாக, உயர் அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X