ரேஷன் கடை மதுக்கடையானது; மக்கள் மறியல் மறியலால் போக்குவரத்து பாதிப்பு

Added : நவ 22, 2022 | |
Advertisement
உடுமலை:மடத்துக்குளம் அருகே, ரேஷன் கடை என கூறி, கட்டடம் கட்டி டாஸ்மாக் மதுக்கடை திறக்க முயற்சித்ததால், ஆவேசமடைந்த பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் ரோடு மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.கோவை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில், உடுமலை அருகே, மைவாடி பிரிவு உள்ளது. இங்கிருந்து, கணியூர் செல்லும் ரோட்டில், கே.கே., புதுார், மைவாடி, படையாச்சிபுதுார், என்.எல்.சி., மற்றும் அலுவலர்
 ரேஷன் கடை மதுக்கடையானது; மக்கள் மறியல் மறியலால் போக்குவரத்து பாதிப்பு

உடுமலை:மடத்துக்குளம் அருகே, ரேஷன் கடை என கூறி, கட்டடம் கட்டி டாஸ்மாக் மதுக்கடை திறக்க முயற்சித்ததால், ஆவேசமடைந்த பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் ரோடு மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

கோவை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில், உடுமலை அருகே, மைவாடி பிரிவு உள்ளது. இங்கிருந்து, கணியூர் செல்லும் ரோட்டில், கே.கே., புதுார், மைவாடி, படையாச்சிபுதுார், என்.எல்.சி., மற்றும் அலுவலர் குடியிருப்பு, செங்கண்டிபுதுார், ஜோத்தம்பட்டி என, ஏராளமான கிராமங்களும், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் உள்ளன.

தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, சில மீட்டர் துாரத்தில், கே.கே., புதுார் பகுதியில், ரேஷன் கடை கட்டுவதாக, ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

இந்நிலையில், திடீரென டாஸ்மாக் மதுக்கடை அமைப்பதற்கான பணிகளை, ஆளும்கட்சியினரும், டாஸ்மாக் ஊழியர்களும் செய்து வந்தனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், நேற்று காலை, 9:30 மணிக்கு, கோவை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில், மைவாடி பிரிவு பகுதியில், சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் கிடைத்து, அங்கு வந்த மடத்துக்குளம் தாசில்தார் செல்வி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

ரேஷன் கடை கட்டுவதாக கட்டடம் கட்டப்பட்டதால், மகிழ்ச்சியடைந்தோம். ஆனால், பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், டாஸ்மாக் மதுக்கடை அமைக்கின்றனர்.

இந்த கடை அமைய உள்ள பகுதியில், கே.கே., புதுார் மயானமும், மைவாடி கிராமத்திற்கான மயானமும் உள்ளது.

மேலும், தோட்டத்துச்சாளைகள், பள்ளி, கோவில்கள் என அருகருகே உள்ளது. மதுக்கடைக்கு அருகிலேயே, பல ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் இரு கிராமங்கள் உள்ளன.

பஸ் வசதி இல்லாத நிலையில், பள்ளி குழந்தைகள், பெண்கள் என அனைவரும், மைவாடி பிரிவில் இறங்கி, நடந்து செல்கின்றனர்.

டாஸ்மாக் மதுக்கடை வந்தால், போதை ஆசாமிகளால், குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. இறந்தவர்களை புதைக்கும், இரண்டு மயானங்களும் பயன்படுத்த முடியாமல், டாஸ்மாக் கடை மற்றும் போதை ஆசாமிகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும்; பிணங்கள் புதைக்க கூட வழியிருக்காது.

எனவே, டாஸ்மாக் மதுக்கடை அமைக்கும் திட்டத்தை கைவிடவும், மதுக்கடை வராது என அதிகாரிகள் உறுதியளிக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

மதுக்கடைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் உறுதியாக இருந்த நிலையில், போலீசார், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்புக்கும் பேச்சுவார்த்தை இழுபறியானதோடு, இன்ஸ்பெக்டர், 4 எஸ்.ஐ., மற்றும் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு, மக்களை கலைக்க முயற்சித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் தரப்பில் பல மணி நேரம் பேச்சு நடத்திய நிலையில், 'டாஸ்மாக் மதுக்கடை அமைக்க அனுமதிக்க மாட்டோம்; பொதுமக்கள் எதிர்ப்பு உள்ளதை. மாவட்ட நிர்வாகம் மற்றும் டாஸ்மாக் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பி, அதன் நகல் பொதுமக்களுக்கு வழங்கப்படும், என உறுதியளித்தனர்.

இதனையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். தேசிய நெடுஞ்சாலையில், இரண்டு மணி நேரம் நடத்த, சாலை மறியலால், இரு புறமும், நுாற்றுக்கணக்கான வாகனங்கள், பல கி.மீ., துாரம் காத்திருந்தன. ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு மட்டும் வழிவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X