பெண் போலீஸ் தற்கொலை முயற்சி

Added : நவ 22, 2022 | |
Advertisement
அமைந்தகரை, :விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா, 24; ஆயுதப்படை போலீஸ். இவர் சென்னையில் பணிபுரியும் நிலையில், இவரது கணவர் பாண்டியன், ஒன்பது வயது மகன் ஆகியோர் விழுப்புரத்தில் உள்ளனர்.சென்னை அமைந்தகரை, கலெக்ட்ரேட் காலனியில் தங்கியிருந்த ஸ்டெல்லா, நேற்று முன்தினம் தன் தாயை போனில் அழைத்து, தனக்கு 8 லட்சம் ரூபாய் வரை கடன் இருப்பதால், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக

அமைந்தகரை, :விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்டெல்லா, 24; ஆயுதப்படை போலீஸ். இவர் சென்னையில் பணிபுரியும் நிலையில், இவரது கணவர் பாண்டியன், ஒன்பது வயது மகன் ஆகியோர் விழுப்புரத்தில் உள்ளனர்.

சென்னை அமைந்தகரை, கலெக்ட்ரேட் காலனியில் தங்கியிருந்த ஸ்டெல்லா, நேற்று முன்தினம் தன் தாயை போனில் அழைத்து, தனக்கு 8 லட்சம் ரூபாய் வரை கடன் இருப்பதால், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த அவரது தாய், சென்னையில் தங்கியுள்ள தன் கணவர் நடராஜனுக்கு தகவல் அளித்தார்.

நடராஜன் சென்று, ஸ்டெல்லா வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, கையில் பிளேடால் அறுத்த நிலையில், வாயில் நுரை தள்ளியபடி அவர் மயங்கி கிடந்துள்ளார்.

பின், அங்கிருந்தோர் உதவியுடன் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இது குறித்து அமைந்தகரை போலீசார் விசாரித்ததில், கடன் தொல்லையால் கொசு மருந்து குடித்து, பிளேடால் கைகளை அறுத்துக் தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X