காட்டுப்பன்றிகளால் ஏற்பட்ட சேதத்துக்கு...நிவாரணம் கிடைக்குமா? மவுனம் காக்கும் வனத்துறையால் அதிருப்தி

Added : நவ 22, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலை அருகே, காட்டுப்பன்றிகளால், நுாற்றுக்கணக்கான ஏக்கரில், மக்காச்சோள சாகுபடி முற்றிலுமாக சேதமடைந்துள்ள நிலையில், சம்பவ இடத்தில், ஆய்வு கூட நடத்தாமல், வனத்துறையினர், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மவுனம் காப்பது விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனம், புதுப்பாளையம் கிளை கால்வாய் வாயிலாக, புதுப்பாளையம்,
 காட்டுப்பன்றிகளால் ஏற்பட்ட சேதத்துக்கு...நிவாரணம் கிடைக்குமா? மவுனம் காக்கும் வனத்துறையால் அதிருப்தி

உடுமலை:உடுமலை அருகே, காட்டுப்பன்றிகளால், நுாற்றுக்கணக்கான ஏக்கரில், மக்காச்சோள சாகுபடி முற்றிலுமாக சேதமடைந்துள்ள நிலையில், சம்பவ இடத்தில், ஆய்வு கூட நடத்தாமல், வனத்துறையினர், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், மவுனம் காப்பது விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனம், புதுப்பாளையம் கிளை கால்வாய் வாயிலாக, புதுப்பாளையம், அடிவள்ளி, விருகல்பட்டி, வல்லக்குண்டாபுரம், பழையூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில், பிரதானமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பயிர்களில் கதிர் பிடிக்கும் தருணத்தில், காட்டுப்பன்றிகள் அப்பகுதியில், கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. நாள்தோறும், 20 ஏக்கருக்கும் அதிகமான பரப்பிலான சாகுபடி சேதமடைந்து வருகிறது. பல மாத உழைப்பு வீணாகியுள்ளதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இது குறித்து 'தினமலரில்' செய்தி வெளியானது; இதையடுத்து, குடிமங்கலம் வட்டார வேளாண்துறை உதவி இயக்குனர் வசந்தா, உதவி வேளாண் அலுவலர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதியில், ஆய்வு செய்தனர்.


விபரங்கள் சேகரிப்பு



வேளாண்துறையினர் கூறியதாவது:

குடிமங்கலம் வட்டாரத்தில், 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விருகல்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில், மக்காச்சோள பயிரில், தற்போது, கதிர் பால் பிடிக்கும் தருணத்தில், காட்டுப்பன்றிகளால் சேதமடைந்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, விருகல்பட்டி, அடிவள்ளி, புதுப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில், காட்டுப்பன்றிகளால், சேதமடைந்த மக்காச்சோள விவசாயிகளின் விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. பின், வருவாய்த்துறை அலுவலர்களுடன் இணைந்து, கள ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

கணக்கெடுப்பு விபரங்கள், திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் வாயிலாக, மாவட்ட நிர்வாகத்துக்கு, உரிய மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படும். காட்டுப்பன்றிகளால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து, உதவி வேளாண் அலுவலரிடம் விவசாயிகள் விபரங்களை தெரிவிக்கலாம்.

இவ்வாறு, வேளாண்துறையினர் தெரிவித்தனர்.


வனத்துறை அலட்சியம்



வனப்பகுதியில் இருந்து வெகுதொலைவில் அமைந்துள்ள கிராமங்களில், காட்டுப்பன்றிகளால், விளைநிலங்கள் சேதம் அடைந்துள்ளதுடன், விவசாயிகளும், தொழிலாளர்களும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சீசன் சாகுபடியே ஒட்டுமொத்தமாக காணாமல் போயுள்ளது.

ஆனால், வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு கூட நடத்தாமல், அலட்சியம் காட்டி வருகின்றனர்.

காட்டுப்பன்றிகளால், உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், பல ஆயிரம் ஏக்கரில், வேளாண் சாகுபடி, கேள்விக்குறியாகியுள்ளது. காட்டுப்பன்றிகளை, வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்; பாதிக்கும் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நீண்ட காலமாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி, உடுமலையில், சில ஆண்டுகளுக்கு முன் விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

தற்போதும், அனைத்து பகுதிகளிலும், சேதம் அதிகரித்துள்ள நிலையில், வனத்துறையினரின் அலட்சியம் விவசாயிகளை மீண்டும் போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளியுள்ளது.

உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதியில், வனத்துறையினர் ஆய்வு செய்து நிவாரணம் வழங்காவிட்டால், கண்டுகொள்ளாத வனத்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து அனைத்து பகுதியிலும், விவசாயிகள் போராட்டத்தில், ஈடுபடும் வாய்ப்புள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X