முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு

Added : நவ 22, 2022 | |
Advertisement
சென்னை,:திருவல்லிக்கேணி ஹிந்து சீனியர் செகன்டரி பள்ளியில், 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சங்கமம் விழா நடந்தது. இந்த சந்திப்பு மறக்க முடியாத நாளாக அமைந்ததாக, அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.சென்னை, திருவல்லிக்கேணியில் ஹிந்து சீனியர் செகன்டரி பள்ளி உள்ளது.150 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியில், 1971- - 77ம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பொன்விழாவாக, கடந்த
 முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு

சென்னை,:திருவல்லிக்கேணி ஹிந்து சீனியர் செகன்டரி பள்ளியில், 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சங்கமம் விழா நடந்தது. இந்த சந்திப்பு மறக்க முடியாத நாளாக அமைந்ததாக, அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னை, திருவல்லிக்கேணியில் ஹிந்து சீனியர் செகன்டரி பள்ளி உள்ளது.

150 ஆண்டுகள் பழமையான இந்த பள்ளியில், 1971- - 77ம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பொன்விழாவாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த பள்ளியில் படித்து, இந்திய கடற்படையில் கமாண்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற முரளி, ஆடிட்டர்கள் சீனிவாசன், சிவசங்கர், தொழிலதிபர் பத்ரி, இந்தியன் வங்கி முன்னாள் ஊழியர் வெங்கட்ராமன் ஆகியோர், பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.

இந்த விழாவில், ஆண்கள், பெண்கள் என, 35 முன்னாள் மாணவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

'சைனிங் ஸ்டார் - 77' என பெயரிட்டு நடந்த இந்த சந்திப்பில், தங்களின் பள்ளி பருவ காலத்தில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களை பேசி மகிழ்ந்தனர்.

முன்னாள் மாணவரும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியுமான பி.என்.பிரகாஷ், அவரது நண்பர்கள் சீனிவாஸ், சீனிவாசன், ராஜகோபால் மற்றும் சுஜாதா பிரகாஷ், ஜெ.ராம் ஆகியோருடன் இணைந்து, 'திருவிளையாடல்' திரைப்படத்தின் 'தருமி' வசனங்கள் நாடகமாக அரங்கேற்றினார்.

நிகழ்ச்சியில், இவர்களுடன் ஹிந்து கல்வி நிறுவனத்தின் தலைவர் கே.கணேசன் பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.பராசரனுக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் நினைவு பரிசு வழங்கினார்.

நிகழ்ச்சியில், 'இன்றைய மற்றும் அந்தக்கால ஆசிரியர்கள் பணி, இதில் எது சவாலானது?' என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில், இன்றைய ஆசிரியர்கள் பணியே சவாலானது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும், விழா ஒருங்கிணைப்பாளர்கள் நினைவு பரிசுகளை வழங்கினர். இந்த சந்திப்பு, வாழ்க்கையின் பொன்னாளாக அமைந்ததாக, அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X