நகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு ஆய்வில் 85 கிலோ பறிமுதல்

Added : நவ 22, 2022 | |
Advertisement
உடுமலை;உடுமலை நகராட்சியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், கேரி பேக் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்து, தராசுகள் மற்றும் 85 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.உடுமலை நகராட்சி பகுதிகளில், கேரி பேக், கவர்கள் என தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.இந்நிலையில், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செல்வம், சிவக்குமார், ராஜ்மோகன் தலைமையிலான
 நகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு ஆய்வில் 85 கிலோ பறிமுதல்

உடுமலை;உடுமலை நகராட்சியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், கேரி பேக் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்து, தராசுகள் மற்றும் 85 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது.

உடுமலை நகராட்சி பகுதிகளில், கேரி பேக், கவர்கள் என தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் செல்வம், சிவக்குமார், ராஜ்மோகன் தலைமையிலான அதிகாரிகள் குழு, சத்திரம் வீதி, பழநி ரோடு, கல்பனா ரோடு உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு, 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு, 85 கிலோ, பிளாஸ்டிக் பை, கேரி, கப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என பல முறை அறிவுறுத்தியும், அபராதம் விதிக்கப்பட்ட, 3 கடைகளில், மீண்டும் இருந்ததால், அக்கடைகளிலிருந்த, தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், தொடர்ந்து பயன்படுத்தினால், கடும் அபராதம் விதிப்பதோடு, கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X