சத்துணவு பாடம் வினாத்தாள் தயாரிப்பு ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
உடுமலை:திருமூர்த்திமலை ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில், நெசவியல் தொழில் நுட்பம், சத்துணவியல் பாடத்திற்கு, வினாத்தாள் தயாரிப்பதற்கான பயிற்சி முகாம் உடுமலையில் நடந்தது.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழிகாட்டுதல் அடிப்படையில், ஆசிரியர் கல்வி மாநில மதிப்பீட்டு புலம்- வினாக்கள் தயாரிப்பதற்கான பணிமனை, திருப்பூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்

உடுமலை:திருமூர்த்திமலை ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில், நெசவியல் தொழில் நுட்பம், சத்துணவியல் பாடத்திற்கு, வினாத்தாள் தயாரிப்பதற்கான பயிற்சி முகாம் உடுமலையில் நடந்தது.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வழிகாட்டுதல் அடிப்படையில், ஆசிரியர் கல்வி மாநில மதிப்பீட்டு புலம்- வினாக்கள் தயாரிப்பதற்கான பணிமனை, திருப்பூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், உடுமலை பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.

முதல்வர் சங்கர் துவக்கி வைத்து, 'திருப்பூர் மாவட்டத்திற்குரிய பாடங்கள், நெசவியல் தொழில் நுட்பம், சத்துணவியல் போன்ற பாடங்களுக்கு பாடநுால் வகை பிரித்தலுடன் கூடிய பாடப்பகுதிகளுக்கு பல உள் தெரிவு, வினாக்கள், பருவத்தேர்வு வினாத்தாள்களும் தயாரிப்பது குறித்து, விளக்கினார்.

ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணி, ''மாநில மதிப்பீட்டு புலம் வழியாக, நவ., 2022 முதல் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெள்ளோட்ட அடிப்படையில், கோவை, திருவண்ணாமலை ஆகிய இரு மாவட்டங்களிலுள்ள, அரசு பள்ளிகளில், 6 முதல், 12ம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

முதுநிலை விரிவுரையாளர் பாபி இந்திரா,'' 6 முதல், 12ம் வகுப்பிற்கான பருவத்தேர்வு மற்றும் ஆண்டுத்தேர்வுகளுக்கான வினாத்தாள்களை உரிய முறையில் தயாரித்து, பள்ளி கல்வித்துறையினர் இணையத்தில், ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும்,'' என்றார்.

இதற்காக பல்வேறு மாவட்டங்களைசசேர்ந்த, பணி அனுபவம் மிக்க ஆசிரியர் குழு கொண்டு தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நெசவியல் தொழில் நுட்ப பாடத்திற்காக, ஆசிரியர்கள் சிவராஜன், கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், சத்துணவியல் பாடத்திற்கு, நாகவடிவு அரசி, சோபியா ஆகியோரும், மற்ற ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X