சென்னை - திருச்சி நெடுஞ்சாலை விபத்தைத் தடுக்க புது முயற்சி! ஐ.ஐ.டி.,யுடன் கை கோர்த்தது விழுப்புரம் போலீஸ்

Added : நவ 22, 2022 | |
Advertisement
விழுப்புரம் : சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க விழுப்புரம் மாவட்ட போலீசார், சென்னை ஐ.ஐ.டி.,யுடன் கை கோர்த்து, 'பைலட்' திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டத்தில் பெருகி வரும் மக்கள் தொகை, வாகன பெருக்கம், குண்டும், குழியுமான சாலை, போக்குவரத்து விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டுச் செல்லும் வாகனங்கள் என பல
Chennai,Thiruchirapalli,Viluppuram,சென்னை,திருச்சி,விழுப்புரம்

விழுப்புரம் : சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க விழுப்புரம் மாவட்ட போலீசார், சென்னை ஐ.ஐ.டி.,யுடன் கை கோர்த்து, 'பைலட்' திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் பெருகி வரும் மக்கள் தொகை, வாகன பெருக்கம், குண்டும், குழியுமான சாலை, போக்குவரத்து விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டுச் செல்லும் வாகனங்கள் என பல காரணங்களால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது.

மாவட்டம் முழுதும் கடந்த ஜனவரி மாதம் முதல் கடந்த 20ம் தேதி வரை நடந்த விபத்துகளில் 329 பேர் இறந்துள்ளனர். இதுதவிர 1811 விபத்துகளில் பலர் கை, கால்களை இழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழக்கும் நபர் மற்றும் உடல் உறுப்புகளை இழக்கும் நபர்களின் குடும்பங்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியிலும் கடும் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

மாவட்டத்தில் சென்னை - திருச்சி இடையிலான நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகள் அதிகம்.

விபத்துகளைத் தடுக்க சாலை பாதுகாப்பில் அறிவியல் ரீதியான அணுகுமுறையை அமல்படுத்த ஐ.ஐ.டி.,யில் செயல்படும் சென்டர் ஆப் எக்ஸிலன்ஸ் பார் ரோடு சேப்டி எனப்படும் சாலை பாதுகாப்பு சிறப்பு மையத்துடன் விழுப்புரம் போலீசார் இணைந்து 'பைலட்' திட்டம் எனும் புதிய முயற்சியை செயல்படுத்தி வருகின்றனர்.

சென்னை துவங்கி திருச்சி வரை மேற்கொள்ளப்படும் இந்த சாலை பாதுகாப்பு முயற்சியில், விழுப்புரம் மாவட்ட எல்லையான ஒங்கூரில் இருந்து சித்தனாங்கூர் வரையிலான பகுதியில் 3 போலீஸ் பேட்ரோல் வாகனங்கள் மூலம் ஆங்காங்கே கண்காணிப்பு பணி நடக்கிறது.

ஒங்கூர், திண்டிவனம் பகுதியில் ஸ்பீடுகன் எனப்படும் வாகன வேகத்தைக் கண்டறியும் கருவி மூலம் அதிவேகமாக வரும் வாகனங்கள் கண்டறியப்படுகிறது.

நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள மொபைல் அப்ளிகேஷனில் இது பதிவாகிறது. உடனே விக்கிரவாண்டி டோல்கேட்டில் நிற்கும் போலீசாருக்கு தகவல் செல்கிறது.

அங்கு தயாராக நிற்கும் ரோந்து வாகனம், அதிவேகமாக வரும் வாகனத்தை மடக்கி வழக்குப் பதிவு செய்கின்றனர்.

இதுபோல் சித்தனாங்கூர் விக்கிரவாண்டி இடையில் நிற்கும் ரோந்து வாகனம் ஸ்பீடுகன் மூலம் வாகனத்தின் வேகத்தை கண்டறிந்து, விக்கிரவாண்டி டோல்கேட் போலீசாருக்கு அனுப்புகிறது.

இதுமட்டும் இன்றி விதிமுறை மீறி சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல்களும் மொபைல் அப்ளிகேஷனில் பதிவு செய்யப்படுகிறது.

இந்த தரவுகள் மூலம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துகள் கணிசமாக குறையும் பட்சத்தில், நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்ட பகுதியில் பல இடங்களில் நிரந்தரமாக வாகன வேகத்தைக் கண்டறிந்து பதிவு செய்யும் கருவி பொருத்தப்பட உள்ளது.

விழுப்புரம் போலீசார், சென்னை ஐ.ஐ.டி.,யுடன் மேற்கொள்ளும் இப்பணிகளை, தமிழ்நாடு அரசின் சாலைப் பாதுகாப்பு சிறப்புப் பணிக்குழு கண்காணித்து வருகிறது.


உரிமம் தற்காலிக ரத்து



விரைவு சாலைகளில் வாகனங்கள் மணிக்கு 120 கி.மீ., வேகத்திலும், தேசிய நெடுஞ்சாலைகளில் 80 கி.மீ., வேகத்திலும் செல்லாம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வேகத்தைத் தாண்டும் வாகனங்களுக்கு 1,000 ரூபாய் அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X