வேளச்சேரி ரயில் நிலையத்தில் 60 'சிசிடிவி' கேமராக்கள்

Added : நவ 22, 2022 | |
Advertisement
சென்னை சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே தினமும் 150 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த தடத்தில், தினமும் ஒரு லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.இந்த நிலையில், பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வேளச்சேரி ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் துவங்கப்பட்டு யள்ளன.சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:தெற்கு



சென்னை சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே தினமும் 150 சர்வீஸ் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த தடத்தில், தினமும் ஒரு லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், வேளச்சேரி ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் துவங்கப்பட்டு யள்ளன.

சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:

தெற்கு ரயில்வேயில், அனைத்து ரயில் நிலையங்களிலும் படிப்படியாக அடுத்த மூன்று மாதங்களில் அனைத்து ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இதற்கான, பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. குறிப்பாக, பயணியர் வருகை அதிகமாக வரும் ரயில் நிலையங்களை தேர்வு செய்து, முக்கியத்துவம் அளித்து கேமராக்கள் பொருத்தி வருகிறோம்.

அந்த வகையில், வேளச்சேரி ரயில் நிலையத்தில் நுழைவு, வெளியே செல்லும் பகுதி, நடைமேடைகள், டிக்கெட் கவுன்டர், 'பார்க்கிங்' உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 60 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணிகளை துவங்கி உள்ளோம்.

அடுத்த ஒரு மாதத்தில் அனைத்து கேமராக்களும் பொருத்தி, பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X