மண் வளம் மீட்க பட்டி அமைத்தல்: விவசாயிகள் ஆர்வம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
உடுமலை:மண் வளத்தை மேம்படுத்த, செம்மறியாடுகளை பட்டி அமைத்தல் முறைக்கு, உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில், விவசாயம், தென்னை வளர்ப்பு, கால்நடைத்தொழில் போன்றவை பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில், உடுமலை பகுதியில், பி.ஏ.பி., பாசனம் மற்றும் கிணற்றுப்பாசனத்தின் வாயிலாக பல ஆயிரம் ஏக்கரில், விவசாய

உடுமலை:மண் வளத்தை மேம்படுத்த, செம்மறியாடுகளை பட்டி அமைத்தல் முறைக்கு, உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில், விவசாயம், தென்னை வளர்ப்பு, கால்நடைத்தொழில் போன்றவை பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில், உடுமலை பகுதியில், பி.ஏ.பி., பாசனம் மற்றும் கிணற்றுப்பாசனத்தின் வாயிலாக பல ஆயிரம் ஏக்கரில், விவசாய சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில், கிணற்றுப்பாசன முறையில், ஆண்டுமுழுவதும், காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது; நீண்ட கால பயிராக தென்னை மரங்களும் பராமரிக்கப்படுகிறது. அனைத்து வகை மண்களிலும், தொடர்ச்சியான சாகுபடி காரணமாக வளம் பாதிக்கிறது. வளம் குறைவால், மகசூல் பாதிக்கிறது; இடுபொருட்கள் செலவும் பல மடங்கு உயர்கிறது.

எனவே, பல்வேறு பரிந்துரைகள் அடிப்படையில், தொழு உரம், ரசாயன உரங்களை விவசாயிகள் பயன்படுத்துகின்றனர்.

இருப்பினும், பயிர்களில் சிறந்த விளைச்சலுக்கு, மண் வளத்தை அதிகரிக்க வேண்டும் என, வேளாண்துறையினரும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இதற்காக மண் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், மண் வளத்தை மேம்படுத்த, ஆடுகளை பட்டி அடைத்தல் முறையும் முன்பு அதிகளவு பயன்படுத்தப்பட்டு வந்தது. இது விவசாயிகளுக்கு பெருமளவு பயன்தந்து வந்தது. இதன்படி, விளைநிலங்களில், ஆங்காங்கே தட்டி அமைத்து, அங்கு ஆடுகளை இரவு நேரங்களில், அடைப்பது வழக்கம்.

நுாற்றுக்கணக்கான ஆடுகளை பராமரிப்பவர்களிடம், விவசாயிகள் ஒப்பந்த முறையில், பட்டி அமைத்து வந்தனர். தற்போது இப்பகுதியில், அதிகளவு ஆடுகளை பராமரிக்கும் வழக்கம் குறைந்து விட்டது. எனவே, பிற பகுதிகளில், இருந்து மேய்ச்சலுக்காக கொண்டு வரப்படும் ஆடுகளை, பட்டி அமைக்க பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, அண்டை மாவட்டமான திண்டுக்கல் மாவட்டம் பழநி சுற்றுப்பகுதிகளில் இருந்து வரும் செம்மறியாடுகளை கொண்டு விளைநிலங்களில் பட்டி அமைக்கின்றனர்.

இதனால், தொழு உரம் இயற்கையாக மண்ணுக்கு கிடைத்து, மண் வளம் அதிகரிக்கிறது. தென்னந்தோப்புகளிலும் இம்முறையை பின்பற்றி, மண் வளத்தை அதிகரிக்க உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X