மாணவியருக்காக சிறை சென்றேன்: ஸ்டாலின்

Updated : நவ 23, 2022 | Added : நவ 22, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை:''மாணவியருக்காக கைதாகி, ஒரு மாதம் சிறையில் இருந்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றேன்,'' என, சென்னை ராணி மேரி கல்லுாரி பட்டமளிப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சென்னை ராணி மேரி கல்லுாரியின், 104 வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, தங்கப் பதக்கம் பெற்ற, 104 மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
Stalin, DMK, Queen Mary College, சென்னை, திமுக, ஸ்டாலின்,  ராணி மேரி கல்லுாரி, Chennai, Rani Mary College, MK Stalin,

சென்னை:''மாணவியருக்காக கைதாகி, ஒரு மாதம் சிறையில் இருந்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றேன்,'' என, சென்னை ராணி மேரி கல்லுாரி பட்டமளிப்பு விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை ராணி மேரி கல்லுாரியின், 104 வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, தங்கப் பதக்கம் பெற்ற, 104 மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். அவர்களில் ஆறு பேர் மாற்றுத் திறனாளி மாணவியர்.

விழாவில், 21 துறைகளை சேர்ந்த, இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று, 3,259 மாணவியர் நேரில் சான்றிதழ் பெற்றனர்.

விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

பட்டம் பெறும் நாள் ஒவ்வொருவரின் வாழ்விலும் மிக முக்கியமான நாள். முதல் தலைமுறையாய் பட்டம் பெறுவது அதிலும் சிறப்பானது. நீங்கள் பெற்ற அறிவு, உங்களை மேலும் உயர்த்தட்டும். பாடங்களை படிப்பவர்களாக மட்டுமின்றி, பாடங்களை உருவாக்குவோராக நீங்கள் உயர வேண்டும்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், இந்த கல்லுாரியை இடிக்க ஒரு திட்டம் தீட்டப்பட்டது. அதற்கு எதிராக கல்லுாரி வளாகத்தில் மாணவியர் போராடினர்.

மாணவியரை சந்தித்த நான், உங்கள் போராட்டம் வெற்றி பெற துணை நிற்போம் என்று கூறிவிட்டு, வீட்டுக்கு சென்றேன்.

அன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு என் வீட்டுக்கு போலீஸ் வந்து, என்னை கைது செய்தது. ஒரு மாதம் சிறையில் இருந்தேன். இதை துன்பமாக கருதவில்லை; மாணவியருக்காக மகிழ்ச்சியுடன் ஏற்றேன்.

இந்த கல்லுாரி மாணவியர் தங்கி படிப்பதற்காக, கல்லுாரி வளாகத்திலேயே விடுதி கட்டித் தரப்படும். பெண் கல்வியின் மகத்துவத்தை, உலக அரங்கில் ராணி மேரி கல்லுாரி முன்னிறுத்தும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

உயர்கல்வி அமைச்சர் பொன்முடி பேசுகையில், ''தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை வந்தால், 3, 5, 8ம் வகுப்புகளுக்கு கூட பொது தேர்வு வந்து விடும். அந்த நிலை ஏற்படாமல் இருக்க, மாநில அளவில் கல்வி கொள்கை உருவாக்கப்படுகிறது. தமிழகத்தில், இருமொழி கொள்கை மட்டுமே பின்பற்றப்படும்,'' என்றார்.

விழாவில், உயர்கல்வி முதன்மை செயலர் கார்த்திகேயன், தமிழக கல்லுாரி கல்வி இயக்குனர் ஈஸ்வர மூர்த்தி, சென்னை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் ராவணன், கல்லுாரி முதல்வர் உமா மகேஸ்வரி மற்றும் தேர்வு கட்டுப்பாட்டாளர் அனந்தலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C G MAGESH - CHENNAI,இந்தியா
23-நவ-202217:49:07 IST Report Abuse
C G MAGESH 000
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
23-நவ-202215:00:52 IST Report Abuse
Paraman மாணவியருக்குகாக சிறை செல்லவில்லை....அந்த மாணவியரின் உறவினர் ஒரு உயர் போலீஸ் அதிகாரி...சில பல வருடங்கள் ஆகிவிட்டதால் எப்படி வேண்டு என்றாலும் மாத்தி பொய் சொல்லி கம்பு சுத்தினாலும் நம்பி, கை தட்டுவதற்கு காத்து கொண்டு இருக்கிறார்கள்
Rate this:
Cancel
Bharathi - Melbourne,ஆஸ்திரேலியா
23-நவ-202214:48:14 IST Report Abuse
Bharathi விஷயத்தை போட்டு உடைச்சிட்டாரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X