'மருத்துவ கவுன்சில் தேர்தல் நியாயமாக நடக்கும்'

Added : நவ 22, 2022 | |
Advertisement
சென்னை:''உயர் நீதிமன்ற அறிவுரைப்படி, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல் நியாயமாக நடைபெறும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னையில் அவர் அளித்த பேட்டி: கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா இறப்பின் இறுதி அறிக்கை அடிப்படையில், போலீசார் நடவடிக்கை மேற்கொள்வர். அவருக்கு நடந்த, 'ஆர்த்தோஸ்கோப்' அறுவை சிசிக்சையில் தவறில்லை. ரத்த

சென்னை:''உயர் நீதிமன்ற அறிவுரைப்படி, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல் நியாயமாக நடைபெறும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா இறப்பின் இறுதி அறிக்கை அடிப்படையில், போலீசார் நடவடிக்கை மேற்கொள்வர். அவருக்கு நடந்த, 'ஆர்த்தோஸ்கோப்' அறுவை சிசிக்சையில் தவறில்லை.

ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போடப்படும் கட்டை, அறுவை சிகிச்சை முடிந்ததும் அகற்றி இருக்க வேண்டும். கவனக்குறைவாகவும், அலட்சியமாக இருந்தவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தன்னாட்சி பெற்ற நிறுவனம்.

இதன் நிர்வாகிகள் தேர்தலில், 1.50 லட்சம் டாக்டர்கள் தபால் வாயிலாக ஓட்டளிக்க உள்ளனர். பெரும்பான்மை அடிப்படையில், தலைவர், துணை தலைவர் தேர்வு செய்யப்படுவார்.

மருத்துவ சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் அளித்த மனுவில், 'பதிவாளர் விதிமுறைகளுக்கு மாறாக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் நேர்மையாக தேர்தலை நடத்த மாட்டார். எனவே, வேறு ஒரு பதிவாளரை நியமிக்க வேண்டும்' எனக் கோரினர்.

இதுகுறித்து, மருத்துவ கவுன்சில் நிர்வாகிகளுக்கு, துறை சார்பில், நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

மருத்துவ கவுன்சில் தேர்தல் தொடர்பான வழக்குகள், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

நீதிமன்ற அறிவுரைப்படி தேர்தல் நடைபெறும். அனைத்து டாக்டர்களும் ஏற்கும் வகையில், நியாயமான முறையிலும், ஜனநாயக முறையிலும் தேர்தல் நடைபெறும்.

கடந்த வாரம், நாடு முழுதும் புதிதாக 100 மருத்துவக் கல்லுாரிகளை துவங்க, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில், நாம் ஏற்கனவே கேட்டிருந்த, ஆறு மாவட்டங்களுக்கான கல்லுாரிகளை உள்ளடக்கி தர வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில், 19 ஏக்கர் இடத்தில், தமிழ்வழி மருத்துவ கல்லுாரி துவங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு சுப்பிரமணியன் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X