தோட்டக்கலை அலுவலர்களுக்கு பாமாயில் சாகுபடி பயிற்சி

Added : நவ 22, 2022 | |
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில், தோட்டக்கலை அலுவலர்களுக்கான பாமாயில் சாகுபடி பயிற்சி நடந்தது.துணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த பயிற்சிக்கு, தோட்டக்கலை துணை இயக்குனர் அன்பழகன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர்கள் சுரேஷ், கார்ல் மார்க்ஸ் மற்றும் வெங்கடேசன் திட்ட விளக்க உரையாற்றினர்.கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவன மண்டல மேலாளர் ராஜா மற்றும் முத்துசெல்வன் ஆகியோர் பாமாயில்

விழுப்புரம் : விழுப்புரத்தில், தோட்டக்கலை அலுவலர்களுக்கான பாமாயில் சாகுபடி பயிற்சி நடந்தது.

துணை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த பயிற்சிக்கு, தோட்டக்கலை துணை இயக்குனர் அன்பழகன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர்கள் சுரேஷ், கார்ல் மார்க்ஸ் மற்றும் வெங்கடேசன் திட்ட விளக்க உரையாற்றினர்.

கோத்ரெஜ் அக்ரோவெட் நிறுவன மண்டல மேலாளர் ராஜா மற்றும் முத்துசெல்வன் ஆகியோர் பாமாயில் நடவு முறை, பூ கவாத்து செய்தல், பழக்குலைகள் அறுவடை செய்தல், பாமாயில் மட்டைகளைத் துாளாக்கும் பயிற்சி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது, மாநில பாமாயில் விவசாயிகள் சங்க பொருளாளர் காளிதாஸ் மற்றும் எண்ணெய்பனை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் குமாரசாமி ஆகியோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 2022-23ம் ஆண்டில் 122,50 எக்டர் பாமாயில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாமாயில் சாகுபடி செய்ய ஆர்வமுள்ள விவசாயிகள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி கூடுதல் தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X