'‛லிப்ட்'டில் சிக்கிய மூதாட்டி மீட்பு

Added : நவ 22, 2022 | |
Advertisement
பெரம்பூர் பெரம்பூர், வடிவேலு நகர், 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 80. இவரது மனைவி அய்யம்மாள், 73; இவர், தினமும் வீட்டில் உள்ள, 'லிப்ட்' வாயிலாக, மொட்டை மாடிக்கு சென்று, நடைபயிற்சி செய்வது வழக்கம்.நேற்று காலை 8:00 மணி அளவில், நடைபயிற்சி செய்ய, 'லிப்ட்'டில் மொட்டை மாடிக்கு சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக, லிப்ட் பாதியில் நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த



பெரம்பூர் பெரம்பூர், வடிவேலு நகர், 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 80. இவரது மனைவி அய்யம்மாள், 73; இவர், தினமும் வீட்டில் உள்ள, 'லிப்ட்' வாயிலாக, மொட்டை மாடிக்கு சென்று, நடைபயிற்சி செய்வது வழக்கம்.

நேற்று காலை 8:00 மணி அளவில், நடைபயிற்சி செய்ய, 'லிப்ட்'டில் மொட்டை மாடிக்கு சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக, லிப்ட் பாதியில் நின்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அய்யம்மாள் உதவி கோரி கூச்சலிட்டார்.

அதைக்கேட்டு, அவரது குடும்பத்தினர், அவரை மீட்க முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த செம்பியம் போலீசார், லிப்ட் ஆபரேட்டர் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்களை அழைத்தனர்.

சில நிமிட போராட்டத்திற்கு பின், லிப்ட்டின் இயக்கத்தை சீராக்கி, மூதாட்டியை பாதுகாப்பாக மீட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 'லிப்ட்' திடீரென நின்றது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X