தற்காலிக போக்குவரத்து மாற்றம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
ஆவடி :சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக, தற்காலிக போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.சென்னை பூந்தமல்லி ட்ரங்க் சாலை, போரூரில் இருந்து பூந்தமல்லி வெளிவட்ட சாலை வரை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடக்கின்றன.அதன்படி, பூந்தமல்லி வெளிவட்ட சாலையில், 2023 பிப்., 11ம் தேதி 2023 வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம் அமல் படுத்தப்பட்டு

ஆவடி :சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக, தற்காலிக போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னை பூந்தமல்லி ட்ரங்க் சாலை, போரூரில் இருந்து பூந்தமல்லி வெளிவட்ட சாலை வரை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடக்கின்றன.

அதன்படி, பூந்தமல்லி வெளிவட்ட சாலையில், 2023 பிப்., 11ம் தேதி 2023 வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம் அமல் படுத்தப்பட்டு உள்ளன.

ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து செல்லும் வாகனங்கள்:சென்னை --- பெங்களூரு நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள், பூந்தமல்லி வெளிவட்ட சாலையில் இடதுபுறம் திரும்பி மீஞ்சூர் நோக்கி சென்று, சென்னை வெளிவட்ட அணுகு சாலையில் இடது புறம் நோக்கி சென்றன.

தற்போது, அந்த வாகனங்கள் வழக்கம் போல் இடது புறம் திரும்பாமல், பிரதான சாலையில் 656 அடி தாண்டி சென்று, இரண்டு வெளிவட்ட பாலங்களுக்கு இடையில் உள்ள சாலையில் இடது புறமாக, சென்னை நோக்கி செல்லும்.

வண்டலுாரில் இருந்து செல்லும் வாகனங்கள்:வண்டலுாரில் இருந்து வெளிவட்ட சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும், தற்போது பூந்தமல்லி நசரத்பேட்டை அருகே இடதுபுறம் திரும்பி, சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை வழியாக பூந்தமல்லி நோக்கி சென்றன.

தற்போது, அனைத்து வாகனங்களும் சென்னை வெளிவட்ட சாலையில் நேராக சென்று, கோலப்பஞ்சேரி சுங்கச்சாவடி முன்பு, வலதுபுறம் 'யூ - டர்ன்' திரும்பி, சென்னை வெளிவட்ட சாலையில், பூந்தமல்லி அணுகுசாலை வரை சென்று, பின்னர் சென்னை -- பெங்களூர் நெடுஞ்சாலை வழியாக சென்னை நோக்கி செல்லும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X