மாவட்ட ஹாக்கி போட்டி: 4 பள்ளிகள் வெற்றி

Added : நவ 22, 2022 | |
Advertisement
குன்னுார்:நீலகிரி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில், 4 பள்ளிகள் வெற்றி பெற்றன.'ஹாக்கி நீலகிரி' அமைப்பு சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட ஹாக்கி போட்டி, ஊட்டி லாரன்ஸ் பள்ளி, ஹெப்ரான் பள்ளிகளில், 5 நாட்கள் நடந்தது.இந்த போட்டியில், '14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர்,' என, மூன்று பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரின் போட்டி நடந்தது.அதில், 14 வயதுக்கு உட்பட்டோர் ஆண்கள் பிரிவில்
 மாவட்ட ஹாக்கி போட்டி: 4 பள்ளிகள் வெற்றி

குன்னுார்:நீலகிரி மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில், 4 பள்ளிகள் வெற்றி பெற்றன.

'ஹாக்கி நீலகிரி' அமைப்பு சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான மாவட்ட ஹாக்கி போட்டி, ஊட்டி லாரன்ஸ் பள்ளி, ஹெப்ரான் பள்ளிகளில், 5 நாட்கள் நடந்தது.

இந்த போட்டியில், '14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர்,' என, மூன்று பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரின் போட்டி நடந்தது.

அதில், 14 வயதுக்கு உட்பட்டோர் ஆண்கள் பிரிவில் கிரசன்ட் பள்ளி; பெண்கள் பிரிவில் லாரன்ஸ் பள்ளி முதலிடம் பிடித்தன.

17 வயதுக்கு உட்பட்டோர் ஆண்கள் பிரிவில் பிருந்தாவன் பள்ளி, பெண்கள் பிரிவில் சாம்ராஜ் பள்ளி முதலிடம் பிடித்தன.

19 வயதுக்கு உட்பட்டோர் ஆண்கள் பிரிவில் கிரசன்ட் பள்ளி, பெண்கள் பிரிவில் லாரன்ஸ் பள்ளி முதலிடம் பிடித்தன.

பரிசளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக ஹெப்ரான் பள்ளி முதல்வர் திமோதி ரைட், பயிற்சியாளர் ஆனி ஸ்டாலின், தமிழக ஹாக்கி அணி வீரர் ஜீவகுமார், 'ஹாக்கி நீல்கிரீஸ்' அமைப்பு இணை செயலாளர் தீனா ஆகியோர் பங்கேற்று பரிசு வழங்கினர்.

ஹாக்கிநீல்கிரீஸ் அமைப்பின் தலைவர் அனந்த கிருஷ்ணன் பேசுகையில்,''கடந்த 1942, 1952, 1956 ஆண்டுகளில், இந்திய அணிக்காக விளையாடி தங்க பதக்கம் வென்ற பிரான்சிஸ் நினைவு கோப்பை லாரன்ஸ் பள்ளியில் நடத்தப்பட்டது.

அதில், அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடின,'' என்றார். துணை தலைவர் சுரேஷ்குமார், பொருளாளர் ராஜா, பயிற்சியாளர்கள் ஸ்டாலின் (ஹெப்ரான்), கோபிநாத் (கிரசன்ட்) உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X