முதியோர் உதவித்தொகைக்கு முதல்வர் தொகுதியில் ரூ.30 'கமிஷன்'

Added : நவ 22, 2022 | |
Advertisement
கொளத்துார் :முதல்வர் தொகுதியில், முதியோரின் வாழ்வாதாரத்திற்கு உதவும் மாதாந்திர உதவித்தொகையில், 30 ரூபாய் 'கட்டாய கமிஷன்' வசூலிக்கப்படுகிறது.கொளத்துார் தொகுதியில், அயனாவரம் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், வருவாய்த்துறையின் பட்டியல்படி, சமூக பாதுகாப்பு துறையின் அரசு அங்கீகாரம் பெற்ற வங்கி பணியாளர் மற்றும் தபால் துறை ஊழியர்கள் வாயிலாக, மாதந்தோறும்
 முதியோர் உதவித்தொகைக்கு முதல்வர் தொகுதியில் ரூ.30 'கமிஷன்'

கொளத்துார் :முதல்வர் தொகுதியில், முதியோரின் வாழ்வாதாரத்திற்கு உதவும் மாதாந்திர உதவித்தொகையில், 30 ரூபாய் 'கட்டாய கமிஷன்' வசூலிக்கப்படுகிறது.

கொளத்துார் தொகுதியில், அயனாவரம் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில், வருவாய்த்துறையின் பட்டியல்படி, சமூக பாதுகாப்பு துறையின் அரசு அங்கீகாரம் பெற்ற வங்கி பணியாளர் மற்றும் தபால் துறை ஊழியர்கள் வாயிலாக, மாதந்தோறும் முதியோர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஓராண்டுக்கு முன், பட்டியலில் உள்ள அனைத்து முதியோருக்கும், வருவாய்த்துறையின் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் தபால் துறை ஊழியர்கள் மூலம் வழங்கப்பட்ட உதவித் தொகையில், 50 ரூபாய் வரை கட்டாய கமிஷனாக வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

அதற்கு தீர்வு காணும் வகையில், பெயர் பட்டியலில் உள்ளவர்கள் உதவித்தொகை பெற்றுக்கொண்டதை, வங்கி அலுவலர்கள், 'ஆன்லைன்' பதிவு மூலம் உறுதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போது, அதிலும், கட்டாய கமிஷன் வசூல் வேட்டை நடக்கிறது.

குறிப்பாக, தமிழக முதல்வரின் தொகுதியில், அரசு உதவித்தொகை பெறும், 500க்கும் மேற்பட்ட முதியோர், 30 ரூபாயை கமிஷனாக, 'தண்டம்' அழுகின்றனர்.

அதற்காக, அவர்கள், 1,000 ரூபாய் உதவித்தொகை பெற வரும் போது, சில்லரையாக 30 ரூபாய் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

அப்படி கொண்டு வராதவர்கள், அடுத்த நாள் அவர்கள் குறிப்பிடும் வேறு இடத்திற்கு வர வேண்டும். மேலும், அங்குள்ள ஊழியர்கள், சிலரை மரியாதை குறைவாக ஒருமையில் பேசி, 'மனஉளச்சலை' ஏற்படுகின்றனர்.

முதியோருடன் உறவினர்கள் யாராவது இருந்தால், 'சர்வர்' வேலை செய்யவில்லை. இதனால், ஐந்து நாட்களுக்கு பின், வேறு ஒரு பகுதிக்கு வாருங்கள் என, அலைகழிக்க செய்வதாக கூறப்படுகிறது.

மேலும், 30 ரூபாய், எங்கள் கமிஷன் அல்ல. உதவி தொகை பெற வரும், முதியோரின் ஆவணங்களை சரி பார்க்கும், இங்குள்ள உதவியாளருக்கு கொடுக்கத்தான் என, சமாளிக்கின்றனர்.

முதல்வரின் தொகுதியிலேயே, இந்த முறைகேடுகள் தொடர்வதாக வருந்தும் முதியோர், தங்கள் குறையை யாரிடம் சொல்வது என, பரிதவிக்கின்றனர்.

சமூக பாதுகாப்பு துறை அதிகாரி கூறியதாவது:

இது குறித்து, பாதிக்கப்படும் முதியோர், எந்த பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள், எந்த வங்கி அல்லது தபால் நிலையம் வாயிலாக, உதவித்தொகை பெறுகின்றனர் என்பதை தெரிவித்து, சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகம் மூலம், எங்களிடம் புகார் செய்தால், அதை விசாரித்து, தீர்வு காணப்படும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X