'டான்டீ' நிறுவனத்தை மூடக்கூடாது: லாபகரமாக இயக்க நடவடிக்கை அவசியம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
ஊட்டி:'தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட, 'டான்டீ' நிறுவனத்தை மூடும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கோத்தகிரியில் நடந்த வாகன ஓட்டுனர்கள்மற்றும் 'டான் டீ' தொழிலாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற மா.கம்யூ.,மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:நீலகிரியில் வன விலங்குகளால் மக்களுக்கும்,

ஊட்டி:'தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட, 'டான்டீ' நிறுவனத்தை மூடும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தகிரியில் நடந்த வாகன ஓட்டுனர்கள்மற்றும் 'டான் டீ' தொழிலாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற மா.கம்யூ.,மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

நீலகிரியில் வன விலங்குகளால் மக்களுக்கும், விவசாயத்திற்கும் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட, 'டான்டீ' நிறுவனம் லாபகரமாக இயங்க அனுபவமிக்க அதிகாரியை நியமிக்க வேண்டும். அந்த நிறுவனத்தை மூடும் முயற்சியை அரசு கைவிடவேண்டும். நீலகிரியில், பட்டா நிலத்தில் வளர்க்கப்படும் சில்வர் மரங்களை வெட்ட வனத்துறையிடம் அனுமதி பெறவேண்டும் என்ற நடைமுறையில் தளர்வு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநில குழு உறுப்பினர் பத்ரி, மாவட்ட செயலாளர் பாஸ்கரன், மாவட்ட குழு உறுப்பினர் சோழா மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X