'இனி பேட்டி அளிக்க ஒப்புதல் பெற வேண்டும்!'

Added : நவ 22, 2022 | |
Advertisement
சென்னை:'இனி கட்சியின் ஒப்புதல் பெற்ற பின்பே நிர்வாகிகள், யு டியூப் சேனல்களுக்கு பேட்டி அளிக்க வேண்டும்; மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.அவரது அறிக்கை:நம் கட்சியின் கருத்துகளை, சித்தாந்தங்களை பதிவிடுவதற்கும், எதிர்க்கட்சிகளின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கும், சமூக வலைதளங்கள் பெரிதளவு

சென்னை:'இனி கட்சியின் ஒப்புதல் பெற்ற பின்பே நிர்வாகிகள், யு டியூப் சேனல்களுக்கு பேட்டி அளிக்க வேண்டும்; மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.

அவரது அறிக்கை:

நம் கட்சியின் கருத்துகளை, சித்தாந்தங்களை பதிவிடுவதற்கும், எதிர்க்கட்சிகளின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டுவதற்கும், சமூக வலைதளங்கள் பெரிதளவு பயன்படுத்தப்படுகின்றன.

சமீப காலமாக, 'டிவி' செய்தி நிறுவனங்களுக்கு இணையாக, யு டியூப் செயலியில் எண்ணற்ற சேனல்கள் இயங்கி வருகின்றன. நம் கருத்துகளை முன்னெடுத்து வைப்பதற்கு, யு டியூப் சேனல்களும் பெரிதளவில் உதவுகின்றன.

ஆனால், யு டியூப் சேனல்களுக்கு தமிழக பா.ஜ., சார்பில் நேர்காணல் வழங்கி வரும் சிலர், கட்சியின் நிலைப்பாடுகளை விடுத்து, தங்களது சொந்த கருத்துகளை முன்னிறுத்தி வருகின்றனர்.

கூட்டணி கட்சியை பற்றியும், கூட்டணி தலைவர்களை பற்றியும் சிலர் முன்வைக்கும் விமர்சனங்கள், கட்சியின் நிலைப்பாடாக மாறுவது ஏற்புடையது அல்ல.

அந்த வீடியோவை பார்க்கும் மக்களுக்கு, பா.ஜ.,வின் அதிகாரப்பூர்வ கருத்து மற்றும் கட்சியின் எண்ண ஓட்டம் இதுதான் போன்ற தவறான பிம்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.

அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர்த்து, மற்றவர்கள் 'யு டியூப்' சேனல்களுக்கு நேர்காணல்கள் வழங்க விருப்பப்பட்டால், அதை மாநில ஊடக பிரிவின் தலைவருக்கு தெரியப்படுத்துங்கள்.

இனி வரும் காலங்களில், கட்சியின் ஒப்புதல் பெற்ற பின்பே, நிர்வாகிகள் நேர்காணல் வழங்க வேண்டும். கட்டுப்பாட்டுகளை மீறுபவர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X