போதை பொருள் விற்ற வாலிபர்களுக்கு 'காப்பு'

Added : நவ 22, 2022 | |
Advertisement
ராஜமங்கலம் :சென்னை ராஜமங்கலம் போலீசார், நேற்று காலை, கொளத்துாரில் உள்ள சினிமா தியேட்டர் அருகே, போதை பொருள் விற்பவர்களை பிடிக்க, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில், 'டியோ' ரக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை, பிடித்து விசாரித்தனர்.அவர்களது வாகனத்தை சோதனை செய்ததில், 'அல்ப்ரா ஜோலம்' என்கிற, 230 கிராம் போதைப்பொருள் சிக்கியது. அதன் சந்தை
 போதை பொருள் விற்ற வாலிபர்களுக்கு 'காப்பு'

ராஜமங்கலம் :சென்னை ராஜமங்கலம் போலீசார், நேற்று காலை, கொளத்துாரில் உள்ள சினிமா தியேட்டர் அருகே, போதை பொருள் விற்பவர்களை பிடிக்க, வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில், 'டியோ' ரக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை, பிடித்து விசாரித்தனர்.

அவர்களது வாகனத்தை சோதனை செய்ததில், 'அல்ப்ரா ஜோலம்' என்கிற, 230 கிராம் போதைப்பொருள் சிக்கியது. அதன் சந்தை மதிப்பு, 2.5 லட்சம் ரூபாய் எனக் கூறப்படுகிறது.

அதை கல்லுாரி மாணவர்களிடம் விற்பதற்காக கொண்டு சென்ற, கொளத்துார், கண்ணகி நகர், கம்பர் தெருவைச் சேர்ந்த கிஷோர், 20, பாரத் ராஜிவ் காந்தி நகர், 1வது தெருவைச் சேர்ந்த அருண்குமார், 19, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X