'டூ-வீலரில்' நால்வர் பயணம் இறந்தவருக்கு இழப்பீடு குறைப்பு

Added : நவ 22, 2022 | |
Advertisement
சென்னை இரு சக்கர வாகனத்தில் நான்கு பேர் பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் இறந்த பெண்ணின் கணவருக்கான இழப்பீடு தொகையில், 10 சதவீதம் குறைத்து வழங்க, காப்பீடு நிறுவனத்துக்கு, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கவிதா, 39. டெய்லர். இவர், 2020 மே 5ல், தாம்பரத்தில் இருந்து புழல் பைபாஸ் ரோடு நோக்கி, இரு சக்கர



சென்னை இரு சக்கர வாகனத்தில் நான்கு பேர் பயணித்த போது ஏற்பட்ட விபத்தில் இறந்த பெண்ணின் கணவருக்கான இழப்பீடு தொகையில், 10 சதவீதம் குறைத்து வழங்க, காப்பீடு நிறுவனத்துக்கு, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் கவிதா, 39. டெய்லர். இவர், 2020 மே 5ல், தாம்பரத்தில் இருந்து புழல் பைபாஸ் ரோடு நோக்கி, இரு சக்கர வாகனத்தில் கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் சென்று கொண்டிருந்தார்.

பட்டரவாக்கம் மேம்பாலம் அருகே வந்தபோது, அதே வழித்தடத்தில் வந்த கன்டெய்னர் லாரி, திடீரென இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் கீழே விழுந்த கவிதா மீது லாரி ஏறியதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

தன் மனைவியின் இறப்புக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் கணவர் அருள்குமார் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதி டி.சந்திரசேகரன் முன் நடந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

கன்டெய்னர் லாரி டிரைவர் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே, விபத்துக்கு பிரதான காரணம். அதேபோல, இந்த விபத்தில் மனுதாரருக்கும் பங்கு உள்ளது. மோட்டார் வாகன விதிகளுக்கு எதிராக, இரு சக்கர வாகனத்தில் நான்கு பேர் பயணம் செய்துள்ளனர்.

எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டிய இழப்பீடு தொகையான 14.94 லட்சம் ரூபாயில் 10 சதவீதம் குறைத்து, மீதமுள்ள 13.44 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X