திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் கடை வீதியில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
அரகண்டநல்லுார், கடைவீதியில் சாலையின் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் வந்து விட்டால் ஒதுங்க முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே அரகண்டநல்லுார் கடைவீதியை கடக்க வேண்டி உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தினசரி அவதிப்படுகின்றனர்.
இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அப்புறப்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் இருக்காது. நெடுஞ்சாலைத்துறை பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பை அகற்ற முன்வர வேண்டும்.