வாலிபருக்கு 244 நாள் சிறை

Added : நவ 22, 2022 | |
Advertisement
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடராமன், 56. இவர், 2021ம் ஆண்டு, டிச., 23ம் தேதி, தன் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து, 6 சவரன் தங்க நகைகள் திருடிச் சென்றதாக பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன்படி வழக்கு பதிந்த போலீசார், சென்னை, காசிமேடு, சூர்யநாராயண தெருவைச் சேர்ந்த கிறிஸ்டோபர், 32, என்பவரை கைது செய்து சிறையில்



திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடராமன், 56. இவர், 2021ம் ஆண்டு, டிச., 23ம் தேதி, தன் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து, 6 சவரன் தங்க நகைகள் திருடிச் சென்றதாக பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்படி வழக்கு பதிந்த போலீசார், சென்னை, காசிமேடு, சூர்யநாராயண தெருவைச் சேர்ந்த கிறிஸ்டோபர், 32, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு, திருவள்ளூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நீதிபதி - -2 முன்னிலையில் நடந்து வந்தது. இந்த வழக்கின் மீது நேற்று, மாவட்ட குற்றவியல் நீதித்துறை நீதிபதி - -2 சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கினார்.

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கிறிஸ்டோபருக்கு, 244 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து, கிறிஸ்டோபர் புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில், விசாரணை முடித்து கிறிஸ்டோபருக்கு தண்டனை பெற்று தந்த இன்ஸ்பெக்டர்கள் லாரன்ஸ், முருகானந்தம் ஆகியோரை ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X