வீடு ஒப்படைப்பு தாமதம் இருவருக்கு இழப்பீடு

Added : நவ 22, 2022 | |
Advertisement
சென்னை, :சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, செம்மஞ்சேரி அடுத்த தாழம்பூரில், ராணுவ நல வீட்டுவசதி நிறுவனம் சார்பில் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் வீடு வாங்க, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி உன்னித்தான், 2013ல், 58.67 லட்ச ரூபாய் செலுத்தி ஒப்பந்தம் செய்தார்.இதே போன்று கேப்டன் நாகராஜன் வாசுதேவ ராவ், 2012ல், 39.27 லட்ச ரூபாய் செலுத்தி ஒப்பந்தம் செய்தார். இவர்கள் இருவருக்கும்,

சென்னை, :சென்னை பழைய மாமல்லபுரம் சாலை, செம்மஞ்சேரி அடுத்த தாழம்பூரில், ராணுவ நல வீட்டுவசதி நிறுவனம் சார்பில் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் வீடு வாங்க, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி உன்னித்தான், 2013ல், 58.67 லட்ச ரூபாய் செலுத்தி ஒப்பந்தம் செய்தார்.

இதே போன்று கேப்டன் நாகராஜன் வாசுதேவ ராவ், 2012ல், 39.27 லட்ச ரூபாய் செலுத்தி ஒப்பந்தம் செய்தார். இவர்கள் இருவருக்கும், 2015ல் வீடு ஒப்படைக்கப்படும் என ராணுவ நல வீட்டுவசதி நிறுவனம் தெரிவித்து இருந்தது.

ஆனால், மிக தாமதமாக, 2019ல் தான் இவர்களுக்கான வீடு ஒப்படைப்பு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பணம் செலுத்தியவர்கள், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தனர்.

இந்த புகார்கள் தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் சரவணன் பிறப்பித்த உத்தரவு:

கடந்த, 2015ல் ஏற்பட்ட பெரு வெள்ளம், 2016ல் ஏற்பட்ட புயல் ஆகியவற்றால் கட்டுமான பணிகள் தாமதமானதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த இரண்டு பாதிப்புகளும், அந்நிறுவனம் வீடு ஒப்படைக்க தெரிவித்த காலத்துக்கு அப்பால் நடந்தவை.

எனவே, வீடு ஒப்படைக்க ஏற்பட்ட தாமத காலத்துக்கு, மனுதாரர்கள் செலுத்திய தொகைக்கு உரிய வட்டியை ராணுவ நல வீட்டுவசதி நிறுவனம் அளிக்க வேண்டும். மேலும், இவர்கள் இரண்டு பேருக்கும், தலா, 1 லட்ச ரூபாய் இழப்பீடும், தலா, 25 ஆயிரம் ரூபாய் வழக்கு செலவுக்கும் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X