புதிய தடத்தில் அரசு டவுன் பஸ் ; அமைச்சர் துவக்கி வைப்பு

Added : நவ 22, 2022 | |
Advertisement
செஞ்சி : செஞ்சியில் இருந்து வெள்ளிமேடுபேட்டைக்கு புதிய டவுன் பஸ்சை அமைச்சர் துவக்கி வைத்தார்.செஞ்சியில் இருந்து நீர்பெருத்தகரம் கிராமம் வழியாக வெள்ளிமேடுபேட்டைக்கு புதிதாக டவுன் பஸ் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து புதிய டவுன் பஸ் நேற்று இயக்கப்பட்டது.செஞ்சி தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து அமைச்சர் மஸ்தான் கொடியசைத்து
 புதிய தடத்தில் அரசு டவுன் பஸ் ; அமைச்சர் துவக்கி வைப்பு



செஞ்சி : செஞ்சியில் இருந்து வெள்ளிமேடுபேட்டைக்கு புதிய டவுன் பஸ்சை அமைச்சர் துவக்கி வைத்தார்.

செஞ்சியில் இருந்து நீர்பெருத்தகரம் கிராமம் வழியாக வெள்ளிமேடுபேட்டைக்கு புதிதாக டவுன் பஸ் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து புதிய டவுன் பஸ் நேற்று இயக்கப்பட்டது.

செஞ்சி தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து அமைச்சர் மஸ்தான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஒன்றிய சேர்மன்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட பொது மேலாளர் அர்ஜூனன், வணிக துணை மேலாளர் துரைசாமி, கிளை மேலாளர் சுரேஷ் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X