காதலர்கள் 'பார்க்'கான பஸ் ஸ்டாண்ட்

Added : நவ 22, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் காதலர் பூங்காவாக மாறி வருவதால், போலீஸ் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ள கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையம் நகரில், 2 அரசு மேல்நிலைப்பள்ளிகள், ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, ஐந்து தனியார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. கிராமப் பகுதிகளில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் காலை, 8:00 மணிக்குள் பஸ் ஸ்டாண்ட் வந்து

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் காதலர் பூங்காவாக மாறி வருவதால், போலீஸ் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ள கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டுப்பாளையம் நகரில், 2 அரசு மேல்நிலைப்பள்ளிகள், ஒரு அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, ஐந்து தனியார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

கிராமப் பகுதிகளில் இருந்து வரும் மாணவ, மாணவிகள் காலை, 8:00 மணிக்குள் பஸ் ஸ்டாண்ட் வந்து விடுகின்றனர். இங்கிருந்து பள்ளிக்கு மற்றொரு பஸ்ஸிலும், நடந்தும் செல்கின்றனர். இச்சூழலில் பஸ் ஸ்டாண்டில் அரசு போக்குவரத்து கழக அலுவலகம் அருகே பள்ளி மாணவ, மாணவியர் விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை தடுக்கும் வகையில் இப்பகுதியில்போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என கடை வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, மேட் டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள் கூறியதாவது:

தினமும் பல்வேறு முகம் சுழிக்கும் செயல்கள் பஸ் ஸ்டாண்டில் நடந்து வருகின்றன. பள்ளி செல்லும் இளம் வயதில் மாணவ, மாணவியர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது.

இதனை தடுக்கும் வகையில் காலை, 7:30 மணியிலிருந்து, 9:00 மணி வரையும், மாலை, 4:00 மணியிலிருந்து, 5:00 மணி வரையும் போலீசார் பஸ் ஸ்டாண்டில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். இப்பகுதியில் அநாவசிய மாக நின்று கொண்டிருக்கும் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்களை விசாரித்து கண்டிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X