மாற்றுத்திறனாளி குழந்தைகளின் திறமை

Added : நவ 22, 2022 | |
Advertisement
பெ.நா.பாளையம்:'மாற்றுத்திறனாளிகளின் திறமை, வேறு நபர்களின் திறமை அல்ல, அவரும் நம்முடன் இருப்பவர் தான் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும்' நிகழ்ச்சி நேற்று பல்வேறு பள்ளிகளில் நடந்தது.தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்ப்பதுதொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இக்குழந்தைகளை
 மாற்றுத்திறனாளி குழந்தைகளின் திறமை

பெ.நா.பாளையம்:'மாற்றுத்திறனாளிகளின் திறமை, வேறு நபர்களின் திறமை அல்ல, அவரும் நம்முடன் இருப்பவர் தான் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும்' நிகழ்ச்சி நேற்று பல்வேறு பள்ளிகளில் நடந்தது.

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்ப்பதுதொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இக்குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதால், அவர்களின் முக்கியத்துவத்தையும், சமுதாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வையும் ஏற்படுத்த முடியும். இதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவர்களின் திறமைகளை வெளி கொண்டு வரும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நவ., 14 முதல் டிச., 3ம் தேதி வரை நடக்கிறது.

இதுவரை உறுதிமொழி எடுத்தல், விழிப்புணர்வு பேரணி, இணைவோம் மகிழ்வோம் என்ற பள்ளி அளவிலான நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று கலை நிகழ்ச்சிகளின் அங்கமாக 'காகித பறவை' செயல்பாட்டை பள்ளிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த செயல்பாட்டை குழந்தைகள் தனி நபராகவும், சக மாணவர்களுடன் இணைந்தும் செய்தனர். சக மாணவரோடு, அவரவர் திறமைக்கு ஏற்றபடி காகிதத்தை வெட்டுதல், மடித்தல், ஒட்டுதல் போன்ற செயல்பாடுகள் செய்வதை ஊக்குவிக்கப்பட்டனர். மாற்று திறன், வேற்றுத்திறன் அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். இதை வெளிப் படுத்தும் வகையில், ஒரு வெள்ளை தாளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கை அச்சினை, வண்ணங்கள் பூசி பதித்தனர்.

மாற்றுத்திறனாளிகளை நம் சமூகத்தில் இணைத்தால், அனைவரும் மகிழ்வோம் என்பதை நினைவூட்ட இந்நிகழ்ச்சி நேற்று அனைத்து பள்ளிகளிலும் நடந்தது. இதில், குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X