வயதான தம்பதி தற்கொலை :கிராம மக்கள் சோகம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
பெ.நா.பாளையம்:வயதான தம்பதி வாழ்க்கையில் வெறுப்படைந்து அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.நரசிம்மநாயக்கன்பாளையம், பழையூர், அக்கையா நாயுடு வீதியில் வசித்தவர் குருந்தாசலம், 85. இவரது மனைவி லட்சுமி,80. இவர்களுக்கு நாகரத்தினம் என்ற மகள் உள்ளார்.கடந்த, 7ம் தேதி லட்சுமி, துடியலுாரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு, 14ம் தேதி வீடு திரும்பினார்.

பெ.நா.பாளையம்:வயதான தம்பதி வாழ்க்கையில் வெறுப்படைந்து அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

நரசிம்மநாயக்கன்பாளையம், பழையூர், அக்கையா நாயுடு வீதியில் வசித்தவர் குருந்தாசலம், 85. இவரது மனைவி லட்சுமி,80. இவர்களுக்கு நாகரத்தினம் என்ற மகள் உள்ளார்.

கடந்த, 7ம் தேதி லட்சுமி, துடியலுாரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு, 14ம் தேதி வீடு திரும்பினார். நேற்று காலை லட்சுமி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அறிந்த உறவினர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, லட்சுமி துாக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். லட்சுமியின் கணவர் குருந்தாசலம் குறித்து உறவினர்கள் விசாரிக்க துவங்கினர்.

அப்போது கடந்த வாரம் மேட்டுப்பாளையம், நெல்லித்துறை பாலம் அருகே ஆற்றில் விழுந்து இறந்த சுமார், 85 வயது நபர் குருந்தாசலம் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து, பெரியநாயக்கன்பாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், வயது மூப்பு காரணமாக, வாழ்க்கையில் விரக்தியடைந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X