பெருமாள் கோவில் நிலத்தில் போக்கு கால்வாய் பக்தர்கள் புகாருக்கு பொதுப்பணித் துறை விளக்கம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
பள்ளிக்கரணை, லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான பட்டா நிலத்தின் மதில் சுவர் அகற்றி, ஏரியில் உபரிநீர் வெளியேறும் போக்கு கால்வாய் அமைப்பதாக பக்தர்கள் தரப்பில் புகார் எழுந்தது.ஆனால், அறநிலையத்துறை அனுமதி பெற்று பணிகள் நடப்பதாக பொதுப்பணித் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.சென்னை, பள்ளிக்கரணையில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 900 ஆண்டுகள் பழமை
 பெருமாள் கோவில் நிலத்தில் போக்கு கால்வாய் பக்தர்கள் புகாருக்கு பொதுப்பணித் துறை விளக்கம்

பள்ளிக்கரணை, லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான பட்டா நிலத்தின் மதில் சுவர் அகற்றி, ஏரியில் உபரிநீர் வெளியேறும் போக்கு கால்வாய் அமைப்பதாக பக்தர்கள் தரப்பில் புகார் எழுந்தது.

ஆனால், அறநிலையத்துறை அனுமதி பெற்று பணிகள் நடப்பதாக பொதுப்பணித் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

சென்னை, பள்ளிக்கரணையில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலை சுற்றியுள்ள 3.11 ஏக்கர் பட்டா நிலம் பக்தரால் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த கோவிலின் ஒரு பக்க மதில் சுவர், கடந்த சில நாட்களுக்கு முன் இடிக்கப்பட்டது. 4 மீட்டர் அகலத்திற்கு ஏரியில் இருந்து போக்கு கால்வாய் ஒன்று பொதுப்பணித்துறையால் அமைக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள், பக்தர்கள், கோவில் நிர்வாகம் அனுமதியின்றி போக்கு கால்வாய் அமைப்பதாவும், கோவிலின் பின்புறம் உள்ள நிலத்திற்கு வழித்தடம் அமைக்க இந்த பணி நடப்பதாகவும் புகார் எழுந்தது.

சமூக வலைதளங்களிலும் இத்தகவல் பரவியது. இப்புகாருக்கு பொதுப்பணித் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:

பள்ளிக்கரணை அணை ஏரி நிரம்பினால், உபரி நீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து, பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இதை தடுக்கும் வகையில், ஏரியில் இருந்து போக்கு கால்வாய் அமைக்கப்படுகிறது.

ஏரியில் இருந்து ஆதிமூலம் நகர் சாலை வழியாக கால்வாய் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. இதனால், ஏரியை அடுத்துள்ள தனியார் பட்டா நிலம் மற்றும் கோவில் நிலத்தின் வழியாக போக்கு கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரி மனு அனுப்பப்பட்டது. கோவிலுக்கு தரைவாடகை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கரை அருகில் உள்ள பட்டா நிலத்தின் உரிமையாளரிடமும் அனுமதி பெறப்பட்டுவிட்டது.

அதன்படி கடந்த 20 நாட்களாக பணிகள் நடந்து வருகின்றன.

அணை ஏரியில் இருந்து லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தெரு வரை, 98 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலத்தில் கால்வாய் அமைக்கப்படுகிறது.

அங்கிருந்து தாம்பரம்- - வேளச்சேரி சாலைக்கு, 2 மீட்டர் அகலம், 265 மீட்டர் நீளத்திற்கு இருவழித்தடத்தில் உபரிநீர் செல்லும் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள், 49 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது.

அடுத்த மூன்று மாதங்களில் முடிக்கப்படும். அதன் பின் கோவில் மதில்சுவர் மீண்டும் எழுப்பப்பட்டு விடும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

லட்சுமி நாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், ஏரி உபரி நீர் கால்வாய் அமைக்க முறையான அனுமதி கோரினர். அறநிலையத் துறை கமிஷனர் ஒப்புதல் அளித்த பின், ஐந்து ஆண்டுகளுக்கு தரை வாடகை உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன், மீண்டும் பொதுப்பணித் துறை சார்பில், மதில்சுவர் எழுப்பி தருவர்.

அறநிலையத் துறை அதிகாரிகள்

- -நமது நிருபர்- -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X