எரியாத மின் விளக்குகள்

Added : நவ 22, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம்:பஸ் ஸ்டாண்டில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து உள்ளதால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், இரண்டு அடுக்கில், நான்கு தளங்கள் உள்ளன. முதல் தளத்தில் கோவை, பழநி செல்லும் பஸ்கள், இரண்டாம் தளத்தில் சத்தியமங்கலம், பவானி சாகர், திருப்பூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நிற்கின்றன. மூன்றாவது
 எரியாத மின் விளக்குகள்

மேட்டுப்பாளையம்:பஸ் ஸ்டாண்டில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து உள்ளதால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், இரண்டு அடுக்கில், நான்கு தளங்கள் உள்ளன. முதல் தளத்தில் கோவை, பழநி செல்லும் பஸ்கள், இரண்டாம் தளத்தில் சத்தியமங்கலம், பவானி சாகர், திருப்பூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நிற்கின்றன. மூன்றாவது தளத்தில் டவுன் பஸ்களும், நான்காம் தளத்தில் ஊட்டி, கோத்தகிரி செல்லும் பஸ்களும் நிற்கின்றன. ஒவ்வொரு தளத்திலும், நகராட்சி நிர்வாகத்தினர் மூன்று மின்விளக்குகளை போட்டுள்ளனர். மேலும், கோவை பஸ்கள் நிற்கும் இடத்திலும், அண்ணாதுரை சிலை அருகேயும் 'ஹைமாஸ்' மின்விளக்குகள் போடப்பட்டுள்ளன.

இதில், திருப்பூர், ஈரோடு, சத்தியமங்கலம் பஸ்கள் நிற்கும் தளத்தில் உள்ள மூன்றில், இரண்டு விளக்குகள் எரிவதில்லை. அதேபோன்று டவுன் பஸ்கள் நிற்கும் இடத்திலும், மின் விளக்குகள் எரிவதில்லை. அதனால் இரவு நேரத்தில் பஸ் ஸ்டாண்ட் இருளாக காட்சியளிக்கிறது; பயணிகள் அவதிப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் உடனடியாக எரியாத மின்விளக்குகளை, மாற்றி அமைக்க வேண்டும் என, பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X