ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
கோவில்பாளையம்,:கோவை மாவட்டத்தில், 12 ஒன்றியங்களிலும் ஒட்டு மொத்த சிறுவிடுப்பு போராட்டம், இன்று மற்றும் நாளை நடக்கிறது.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:ஊரக வளர்ச்சித் துறையில் காலங்கடந்த ஆய்வு, விடுமுறை தின ஆய்வு, இரவு நேர ஆய்வு, 'வாட்ஸ்-அப்' காணொளி ஆய்வு ஆகியவற்றை கைவிட வேண்டும். ஊராட்சி செயலர்கள்

கோவில்பாளையம்,:கோவை மாவட்டத்தில், 12 ஒன்றியங்களிலும் ஒட்டு மொத்த சிறுவிடுப்பு போராட்டம், இன்று மற்றும் நாளை நடக்கிறது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஊரக வளர்ச்சித் துறையில் காலங்கடந்த ஆய்வு, விடுமுறை தின ஆய்வு, இரவு நேர ஆய்வு, 'வாட்ஸ்-அப்' காணொளி ஆய்வு ஆகியவற்றை கைவிட வேண்டும். ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர்களுக்கு பணி வரன்முறை செய்ய வேண்டும். பெரிய ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும். காலியாக உள்ள பல ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.

சுகாதார திட்ட மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு பணி வரன்முறை செய்ய வேண்டும். நுாறு நாள் வேலை திட்டத்திற்கு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். பதவி உயர்வு ஆணைகளை தாமதமின்றி வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில், 12 ஊராட்சி ஒன்றியங்களில், 228 கிராம ஊராட்சிகளில், இன்றும், நாளையும், ஊராட்சி செயலர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள், அலுவலர்கள் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X