ரூ.82 லட்சம் கையாடல் உதவி மேலாளருக்கு '6 ஆண்டு'

Added : நவ 22, 2022 | |
Advertisement
சென்னை, :வங்கி வாடிக்கையாளர் கணக்கில் இருந்து, 82 லட்சம் ரூபாய் கையாடல் செய்த உதவி மேலாளருக்கு, ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கரூர் மாவட்டம், மண்மங்கலம், அருமைக்காரன் புதுாரைச் சேர்ந்தவர் மாதவன், 37; சென்னை, எழும்பூரில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கி கிளையில் உதவி மேலாளராக பணிபுரிந்தார்.இவர், அண்ணா நகரைச் சேர்ந்த, எஸ்.பி.ஐ., வங்கி

சென்னை, :வங்கி வாடிக்கையாளர் கணக்கில் இருந்து, 82 லட்சம் ரூபாய் கையாடல் செய்த உதவி மேலாளருக்கு, ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம், மண்மங்கலம், அருமைக்காரன் புதுாரைச் சேர்ந்தவர் மாதவன், 37; சென்னை, எழும்பூரில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கி கிளையில் உதவி மேலாளராக பணிபுரிந்தார்.

இவர், அண்ணா நகரைச் சேர்ந்த, எஸ்.பி.ஐ., வங்கி வாடிக்கையாளர் ராமகிருஷ்ணன் கணக்கில் இருந்து, 82 லட்சம் ரூபாயை கையாடல் செய்துவிட்டதாக, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து, மாதவனை கைது செய்தனர். பின், குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு, சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கோதண்டராஜ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தகுந்த சாட்சியங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், மாதவனுக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், 'ஏற்கனவே இவர், 20 லட்சம் ரூபாய் கட்டிவிட்டதால், மீதமுள்ள, 62 லட்சம் ரூபாயை வங்கிக்கு செலுத்த வேண்டும். தவறினால், மேலும், ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்' எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X