மூன்றாவது குழு காசிக்கு பயணம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
சென்னை:காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து, 214 பேர் உடைய மூன்றாவது குழு, நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. அவர்களை தமிழக பா.ஜ.,வினர் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர். இந்தியாவின் 75 வது சுதந்திர ஆண்டை மத்திய அரசு அமிர்த பெருவிழாவாக கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை ஐ.ஐ.டி., - பனாரஸ் இந்து பல்கலை
 மூன்றாவது குழு காசிக்கு பயணம்

சென்னை:காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழகத்தில் இருந்து, 214 பேர் உடைய மூன்றாவது குழு, நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. அவர்களை தமிழக பா.ஜ.,வினர் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர்.

இந்தியாவின் 75 வது சுதந்திர ஆண்டை மத்திய அரசு அமிர்த பெருவிழாவாக கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை ஐ.ஐ.டி., - பனாரஸ் இந்து பல்கலை பங்களிப்புடன், 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி, இம்மாதம், 17ம் தேதி, உ.பி., மாநிலம், வாரணாசியில் துவங்கியது; பிரதமர் மோடி துவக்கி வைத்தார். டிச., 16 வரை நிகழ்ச்சி நடக்கிறது.

தமிழகத்தில் இருந்து, 2,592 பேர் பங்கேற்க உள்ளனர். காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே உள்ள தொன்மையான நாகரிக பிணைப்பையும், பல நுாற்றாண்டு கால அறிவு பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்யும் வகையில், இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து, உ.பி., மாநிலம், காசிக்கு ரயில்வே சார்பில், 13 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

ஏற்கனவே, இரண்டு குழுவினர் பயணம் சென்றுள்ள நிலையில், 214 பேர் உடைய மூன்றாவது குழுவினர், சென்னை சென்ட்ரலில் இருந்து, பீஹார் மாநிலம் கயாவுக்கு செல்லும் விரைவு ரயிலில், நேற்று வாரணாசிக்கு பயணம் செய்தனர்.

தமிழ் அறிஞர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் என பல்வேறு தரப்பினரும் பயணித்தனர்.

அவர்களுக்கு, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் துரைசாமி மற்றும் நிர்வாகிகள், பழங்கள், தண்ணீர் பாட்டில்களை வழங்கி, உற்சாகமாக வழி அனுப்பி வைத்தார். அதுபோல, ரயில்வே அலுவலர்களும், மலர் கொத்து கொடுத்து, வழி அனுப்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X