மின்சார ரயில் சேவையை அதிகரிக்க கூடுதல் பாதை அமைக்கப்படுமா?

Added : நவ 22, 2022 | |
Advertisement
சென்னை, சென்னையின் எல்லை நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதால், ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வருகின்றன. அதேபோல் தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.இருப்பினும், இன்னும் போதிய அளவில் போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கப்படவில்லை.சென்னையை பொறுத்தவரை, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில், தினமும் 32 லட்சம் பேரும்;



சென்னை, சென்னையின் எல்லை நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதால், ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வருகின்றன. அதேபோல் தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இருப்பினும், இன்னும் போதிய அளவில் போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கப்படவில்லை.

சென்னையை பொறுத்தவரை, மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில், தினமும் 32 லட்சம் பேரும்; மின்சார ரயில்களில் 11 லட்சம் பேரும்; மெட்ரோ ரயில்களில் 2.30 லட்சம் பேரும் பயணித்து வருகின்றனர்.

இருப்பினும், போதிய அளவில் பொது போக்குவரத்து வசதி இல்லாமல் உள்ளது. இனி வரும் ஆண்டு களில், பயணியரின் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால், முக்கிய வழித்தடங்களில் கூடுதல் ரயில் பாதை அமைக்கும் பணியை துவக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து, ரயில் பயணியர் சிலர் கூறியதாவது:

புறநகரில் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, மின்சார ரயில் வசதி இல்லை. இதனால், அலுவலக நேரங்களில், கூட்ட நெரிசலில் பயணம் செய்து பயணியர் அவதிப்படுகின்றனர்.

எனவே, தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில், 4வது புது பாதை; சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில் கூடுதல் பாதை அமைக்க வேண்டும். அதுபோல், ஆவடி - ஸ்ரீபெரும்புதுார், கூடுவாஞ்சேரி ரயில் பாதை திட்டத்தையும் உடனடியாக துவக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

மின்சார ரயில் சேவையை மேம்படுத்தும் வகையில், கூடுதல் ரயில் பாதை அமைப்பது குறித்தும், ஏற்கனவே உள்ள புதிய ரயில் பாதை திட்டப்பணிகளை விரைந்து முடிக்கவும் ஆலோசித்து வருகிறோம்.

புறநகரில் சில வழித்தடங்களில் ஆய்வு செய்து, கூடுதல் ரயில் பாதை அமைப்பது குறித்து, ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரை செய்ய உள்ளோம்.

அதேபோல், ரயில்வே திட்டங்களை, தமிழக அரசுடன் இணைந்து மேற்கொள்வது குறித்து, ஆலோசனை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X