அண்ணா டவர் பூங்காவில் திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம் பெண்கள் கழிப்பறையும் படுமோசம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
அண்ணா நகர், அண்ணா நகர் 'டவர்' பூங்காவில் சுற்றித் திரியும் நாய்களால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில், 718 பூங்காக்கள் உள்ளன. இவற்றில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, 547 பூங்காக்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசமும், 11 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையிலும், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள பூங்காக்களை சென்னை மாநகராட்சி
 அண்ணா டவர் பூங்காவில் திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம்   பெண்கள் கழிப்பறையும் படுமோசம்



அண்ணா நகர், அண்ணா நகர் 'டவர்' பூங்காவில் சுற்றித் திரியும் நாய்களால், பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில், 718 பூங்காக்கள் உள்ளன.

இவற்றில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, 547 பூங்காக்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசமும், 11 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையிலும், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள பூங்காக்களை சென்னை மாநகராட்சி நேரடியாக பராமரித்து வருகிறது.

அந்த வகையில், அண்ணா நகரின் மையப் பகுதியில், 15.5 ஏக்கர் பரப்பளவில், அண்ணா டவர் அமைந்துள்ள டாக்டர் விஸ்வேஸ்வரய்யா பூங்கா உள்ளது. இந்த 'டவர் பூங்கா, தத்தெடுப்பு முறையில் தனியாரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் மட்டுமின்றி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்த பூங்காவிற்கு, நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

அதுமட்டுமின்றி, சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு, 'ஸ்கேட்டிங்' பயிற்சி பெறும் இடங்களும் உள்ளன.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பூங்காவில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

குறிப்பாக, பயணியர் வீசும் தின்பண்டங்களுக்காக நாய்கள் சண்டையிடுகின்றன. இதனால், அங்கு வரும் பொதுமக்கள் பீதியடைகின்றனர்.

அதேபோல், அங்குள்ள பெண்களுக்கான கழிப்பறைகளும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு உள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வலுத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X