மங்கலம்பேட்டையில் மருத்துவ முகாம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
விருத்தாசலம் : மங்கலம்பேட்டையில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், சர்க்கரை நோயாளிகளுக்கான கண் விழித்திரை இலவச பரிசோதனை முகாம் நடந்தது.முகாமிற்கு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலர் இக்பால் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் ரமேஷ்சந்த், மங்கலம்பேட்டை பேரூராட்சி சேர்மன்
 மங்கலம்பேட்டையில் மருத்துவ முகாம்

விருத்தாசலம் : மங்கலம்பேட்டையில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், சர்க்கரை நோயாளிகளுக்கான கண் விழித்திரை இலவச பரிசோதனை முகாம் நடந்தது.

முகாமிற்கு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலர் இக்பால் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் ரமேஷ்சந்த், மங்கலம்பேட்டை பேரூராட்சி சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம், மருத்துவர் கதிர்வேல், தி.மு.க., நகர செயலர் செல்வம், நகர துணை செயலர் பாரி இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமை, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

காங்., நகர தலைவர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில், சர்க்கரை நோயை கண்டறிதல், கண் விழித்திரை பாதிப்பு, பார்வை இழப்பை தடுத்தல் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X