காரமடை ரோட்டில் மண் குவியல்; அகற்றிய துாய்மை பணியாளர்கள்

Added : நவ 22, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம்:காரமடை மெயின் ரோட்டில் இருந்த மண் குவியலை நகராட்சி துாய்மை பணியாளர்கள் சுத்தப்படுத்தினர்.மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை வழியாக கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. கடந்த வாரம் தொடர்ச்சியாக பெய்த மழையால் மெயின் ரோட்டில் தண்ணீரில் அடித்து வந்த மண் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே
 காரமடை ரோட்டில் மண் குவியல்; அகற்றிய துாய்மை பணியாளர்கள்

மேட்டுப்பாளையம்:காரமடை மெயின் ரோட்டில் இருந்த மண் குவியலை நகராட்சி துாய்மை பணியாளர்கள் சுத்தப்படுத்தினர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து காரமடை வழியாக கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.

கடந்த வாரம் தொடர்ச்சியாக பெய்த மழையால் மெயின் ரோட்டில் தண்ணீரில் அடித்து வந்த மண் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ரோட்டில் பெரிய திட்டாக படிந்து கிடந்தது.

இதனால் இவ்வழியாக சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள், மணல் திட்டில் அடிக்கடி சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கி வந்தனர். இந்த மணல் திட்டை அப்புறப்படுத்த தேசிய நெடுஞ்சாலை துறை முன் வரவில்லை. இதற்கிடையே பொதுமக்கள் கோரிக்கையை தொடர்ந்து, காரமடை நகராட்சி துாய்மை பணியாளர்கள் பொக்லைன் இயந்திர உதவியுடன், மண் மற்றும் மணல் குவியலை அப்புறப்படுத்தினர்.

இதனால் காரமடை மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X