கோவிலில் சிலை திருடிய வாலிபர் சிக்கினார்

Added : நவ 22, 2022 | |
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் அருகே பட்டப்பகலில் அம்மன் கோவிலில் சிலையை திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.விழுப்புரம் அடுத்த ஆயந்துார் ஏரிக்கரை அங்காளம்மன் கோவில் பகுதியில் இருந்து நேற்று காலை 10:45 மணிக்கு, 2 வாலிபர்கள் சாக்கு மூட்டையில் ஏதோ எடுத்துச் சென்றனர்.அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் ஏரியிலிருந்து மீன் திருடிச் செல்வதாகக் கூறி 2 பேரையும்

விழுப்புரம் : விழுப்புரம் அருகே பட்டப்பகலில் அம்மன் கோவிலில் சிலையை திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

விழுப்புரம் அடுத்த ஆயந்துார் ஏரிக்கரை அங்காளம்மன் கோவில் பகுதியில் இருந்து நேற்று காலை 10:45 மணிக்கு, 2 வாலிபர்கள் சாக்கு மூட்டையில் ஏதோ எடுத்துச் சென்றனர்.

அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் ஏரியிலிருந்து மீன் திருடிச் செல்வதாகக் கூறி 2 பேரையும் விரட்டினர்.

சாக்கு மூட்டையை கீழே போட்டுவிட்டு ஓடியபோது, ஒரு வாலிபர் பொதுமக்களிடம் பிடிபட்டார். மற்றொருவர் தப்பியோடினார்.

பொதுமக்கள், சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது, ஒரு அடி உயர அம்மன் சிலை, 2 பாம்பு சிலைகள், 1 பித்தளை விளக்கு ஆகியவை இருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த காணை சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று வாலிபரை மீட்டு விசாரித்தனர்.

அதில், கண்டாச்சிபுரம் அடுத்த பரனுார் காலனியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரதீப், 22; என்பதும், இருவரும் அங்காளம்மன் கோவிலில் சுவாமி சிலைகளை திருடியது தெரியவந்தது.

காணை போலீசார் வழக்குப்பதிந்து, பிரதீப்பிடம் விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பியோடிய பரனுாரைச் சேர்ந்த சதீஷ், 29; என்பவரை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X