வருமானவரி சந்தேகங்களுக்கு இன்று விளக்கம்

Added : நவ 22, 2022 | |
Advertisement
கோவை:வருமான வரி செலுத்தும் தனிநபர், அறக்கட்டளை, தொண்டு நிறுவனங்கள், இன்று நடக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வருமானவரித்துறையின் வரிவிலக்கு மற்றும் வரிப்பிடித்தம் பிரிவுகள் சார்பில், வருமானவரி சட்ட திட்டங்களை விளக்கும் விதமாக, 'வரிசெலுத்துவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்று மாலை 3:00 மணிக்கு, அவிநாசி சாலையிலுள்ள இந்திய

கோவை:வருமான வரி செலுத்தும் தனிநபர், அறக்கட்டளை, தொண்டு நிறுவனங்கள், இன்று நடக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வருமானவரித்துறையின் வரிவிலக்கு மற்றும் வரிப்பிடித்தம் பிரிவுகள் சார்பில், வருமானவரி சட்ட திட்டங்களை விளக்கும் விதமாக, 'வரிசெலுத்துவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, இன்று மாலை 3:00 மணிக்கு, அவிநாசி சாலையிலுள்ள இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடக்கிறது.

இதில் கோவை மண்டல தலைமை வருமானவரி கமிஷனர் பூபால்ரெட்டி, தலைமை வருமான வரி கமிஷனர் தமிழ்நாடு மற்றும் புதுவை (டி.டி.எஸ்.) ஆகியோர் பேசுகின்றனர்.

இதில் வருமானவரி விலக்கு பெற, சமீபத்தில் அறிமுகமாகியிருக்கும் புதிய வழிமுறைகள் குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் வெங்கடேசன், வருமானவரி பிடித்தம் குறித்து ஜான் பெனிடிக்ட் அசோக் ஆகியோர் விளக்கமளிக்கின்றனர்.

கேள்வி - பதில் நேரத்தில் பங்கேற்பாளர்கள், தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். இதில் தனிநபர், அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனங்கள்பங்கேற்று பயனடைய, வருமானவரித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X